சுற்றுச்சூழல் மாற்றத்திற்காக 11 வயது சிறுவனின் சூப்பர் ஐடியா

child_envirnmentwalk_001கனடாவின் நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 11-வயதுடைய கீகன் கெலி என்ற சிறுவன் ஒருவன் சுற்றுசூழல் மாற்றம் குறித்து விழிப்புணர்வு செய்த முடிவு செய்தான்.

இதையடுத்து படிப்படியாக உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளான்.

மேலும் மக்கள் அதிக அளவில் தங்கள் கார்களில் தங்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய அவன் இது சாரதிகளிற்கும் சுற்றுச்சூழலிற்கும் ஆரோக்கியமற்றது எனவும் கூறியுள்ளான்.

எனவே அடுத்த வாரம் ஐந்து நாட்களில் 160கிலோமீற்றர்கள் தூரத்தை நடக்க தீர்மானித்துள்ளான். நியுபிறவுன்ஸ்விக்கில் உள்ள சசெக்ஸ் என்ற இடத்தில் இருக்கும் தனது பாட்டியின் வீட்டுக்கு செல்வதற்கு இத்தூரத்தைநடந்து செல்ல போவதாக அறிவித்துள்ளான்.

மக்கள் வாகனங்களை உபயோகிப்பதை குறைத்து அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு முயற்சிஇது எனவும் கூறினான்.

மகனின் நடைபயணத்தில் தானும் அவனுடன் செல்ல போவதாக கெலியின் தாயார் ஜெனிவர்டிக்கிசன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எவராவது தன்னை நேர்காணல் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் 10-கிலோமீற்றர்கள் தூர சுற்று நடக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளான்.

எனினும் சிபிசி நிருபரை பாதி வழியில் சந்திக்க ஒத்து கொண்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

-world.lankasri.com