கறுப்பர்களுக்கு எதிரான வன்முறை: அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால் (வீடியோ இணைப்பு)

ch_aticon_001இனப்பிரச்சனைக்கு தீர்வு இனக்கலவரத்தில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அப்படி இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் உள்ள இமானுவேல் ஏஎம்இ என்ற தேவாலயத்தில் டைலன் ரூப் என்ற 21 வயது வாலிபன், ஆண், பெண் பாரபட்சமில்லாமல் 9 கருப்பு இனத்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான்.

அந்த காரணத்துக்காக கைதும் செய்யப்பட்டுள்ளான். அவனுடைய வன்முறை மற்றும் இனவெறியை தூண்டும் வாசகங்கள், புகைப்படங்கள் அடங்கிய வலை தளமும்(The last Rhodesian) வெளியாகி உள்ளது.

உலக அமைதி சமாதானம், சமத்துவம் என்ற மனிதகுலத்தின் ஏழாம் அறிவின் உந்துதலால் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த மேம்பட்ட மனித வாழ்க்கை புலத்துக்குள், டைலன் ரூபை போன்ற அற்ப புத்தி கொண்டவர்கள் வாழ வராவிட்டாலும் பரவாயில்லை. அந்த தீக்குச்சியால் அமைதி உலகம் பற்றி எரிந்து விடக்கூடாது.

எல்லோருக்குள்ளும் சிறிதளவேனும் இருக்கும் இன உணர்வுகளை அவன் பயன்படுத்தி விடக்கூடாது என்ற பயம்தான் இந்த செய்தி பரபரப்பை கவனிக்கிற மனிதர்களின் மனநிலை. எந்த வெள்ளையர்கள் அமைப்பும் தனக்கு உதவவில்லை என்றும் கூறியுள்ளான்.

சுனாமி, புயல், பூகம்பத்தில் சிக்கியிருப்பவன் போல. இவனைப் போன்ற மனிதர்களும் இயற்கை சீற்றத்தின் ஒரு வகைதான்.

அதுமட்டுமல்ல, அங்கு பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரிகளில் சிலரே டைலன் ரூப் ஆக மாறியுள்ளனர். காரணமே இல்லாமல் கறுப்பர் இன வாலிபரை துரத்தி துரத்தி சுட்டுக்கொள்வது.

அவன் பாக்கெட்டில் கையை விட்டான் அதனால் தற்காப்புக்காக சுட்டேன் என்கிறார். ஆனால், அவனுடைய பாக்கெட் வெற்று பாக்கெட்டாக இருந்தது.

கறுப்பின கர்ப்பிணியை அடித்து துன்புறுத்தியது இன்னொரு பொலிஸ்.

முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டிய இந்த இனவெறி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒபாமா தந்தையர் தினத்தில் ‘மை ப்ரதெர்ஸ் கீப்பர்’ திட்டத்திலும் அதன் டாக்குமென்டரி நிகழ்ச்சியிலும் பேசியதிலிருந்து அறிய முடிகிறது.

ஆலயம் சமதர்மத்தின் அடைக்கலமானது. அங்கு கூட கறுப்பர்கள் அதிகம் வருவது டைலனுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு காலத்துக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா வந்ததும் நிச்சயம் அவனைப் போன்றவர்க்கு பிடித்திருக்காது.

ஆசியாவை சேர்ந்தவர்களை எதிரிகள் என்று சொல்பவன் ஹிஸ்பெனிக்ஸ், ஜீயஸ் இனத்தவர்களையும் இழிவாக குறிப்பிட்டுள்ளான்.

கறுப்பாக பிறந்ததை தவிர வேறு காரணமே இல்லாமல் 9 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு வெள்ளையர்களின் வன்முறை அடையாளமாக மாறிய டைலன் ரூப், கறுப்பர் இனத்தவர்களை முட்டாள்கள் என்றும் வன்முறையாளர்கள் எனவும் சொல்வது முரணாக உள்ளது.

மனிதநேய செம்மல் மண்டேலா அவர்கள் கறுப்பர் இனத்துக்காக இன்று போராடும் நான், கறுப்பர்கள் வெள்ளையர்களை அடிமைப்படுத்தினாலும் வெள்ளையர்களுக்காக போராடுவேன் என்று சொன்ன பொன்மொழியை வாழும் மனிதர்கள் எல்லோரும் பின்பற்றினால், சரி, தவறு பார்க்கப்படும். இனகலவரம் இனகலப்பாக மாறும்.

-http://world.lankasri.com