உணவு திருவிழாவிற்காக கசாப்பு கடையில் அடைக்கப்பட்ட 100 நாய்கள்: காப்பாற்றுவதற்காக 2,400 கி.மீ பயணித்த பெண்

ch_doicon_001நாய்க்கறி திருவிழாவில் விருந்தாக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 நாய்களை மீட்பதற்காக சுமார் 2400 கிலோ மீற்றர் பயணித்து சுமார் ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்து அவைகளை மீட்ட சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட யூலின் நகரில் ஆண்டுதோறும் கோடைக் காலத் திருவிழாவாக நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவின் போது, சமைத்த நாய் இறைச்சியை லெச்சி எனப்படும் உணவுடன் சேர்த்து உண்பது அந்நாட்டு மக்களின் பாரம்பரிய மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு பல தன்னார்வ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் இதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் அங்கு நாய்கறி திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் நாய்கள் வரை இறைச்சிக்காக வெட்டப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டியான்ஜின் நகரை சேர்ந்த யாங் சியாயுன் என்ற பெண் கசாப்புக்கடையில் அடைக்கப்பட்டு இருந்த 100 நாய்களை சுமார் ஆயிரம் அமெரிக்க டாலர்களை நாய் வியாபாரிகளுக்கு தந்து அவைகளை மீட்டுச்சென்றுள்ளார்.

மேலும் இந்த நாய்களை மீட்பதற்காக அவர் டியாஞ்சின் நகரில் இருந்து சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோ மீற்றர் பயணம் செய்து யூலின் நகருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com