பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் அளித்த கொடூரமான தண்டனைகள்: இரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ வெளியீடு!

is_cricon_006ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர் தங்களிடம் உள்ள பிணைக்கதிகளை கொல்லும் வீடியோவை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் பிடியில் இருந்த 16 கைதிகளை கொடுரமான முறையில் கொலை செய்த வீடியோவை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சுமார் ஏழு நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இந்த வீடியோவில் முதலில் கைதிகள் தாங்கள் ஐஎஸ் அமைப்பை உளவு பார்த்ததற்காக தங்களது மன்னிப்பை தெரிவித்துகொள்கின்றனர்.

பின்னர் பிணைக்கைதிகளில் சிலரை ஒரு காரில் அடைத்துவைக்கின்றனர். பின்னர் சில அடிகள் தூரத்தில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தன்னிடம் இருக்கும் ரசாயன துப்பாக்கி மூலம் சுட்டு காரை வெடிக்கசெய்கிறார்.

அடுத்ததாக ஐந்து கைதிகளை ஒரு கூண்டினுள் அடைத்துவைக்கின்றனர். பின்னர் அந்த கூண்டை அப்படியே தண்ணீரினுள் இறக்குகின்றனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த கூண்டை வெளியே எடுக்கும்போது அதில் இருந்த கைதிகள் அனைவரும் இறந்துகிடக்கின்றனர்.

வீடியோவின் முடிவில் 7 கைதிகளை வரிசையாக முட்டி போட வைக்கின்றனர். பின்னர் அவர்களின் கழுத்தில் வெடிகுண்டுகளை ஒருவர் கட்டுகிறார்.

சில வினாடிகள் கழித்து அதை வெடிக்க செய்கிறார். இறுதியில் அவர்களின் உடல்கள் வெடித்து சிதறுவதாக அந்த வீடியோ முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ ஈராக்கின் மொசூல் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவே இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com