இந்தோனேசியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்

isis_reutersமேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரை கவர்ந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பார்வை இந்தோனேசியா பக்கம் திரும்பியுள்ளது.

ஷரியா இஸ்லாமிய சட்டத்தை சிரியா மற்றும் ஈராக்கில் அமல்படுத்தத் துடிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலர் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கால் தடம் பதிக்க நினைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்.

இந்தோனேசியாவில் வசிக்கும் 72 சதவீதம் பேர் ஷரியா சட்டத்தை அமல்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இதுவரை இந்தோனேசியாவில் இருந்து 500 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். மேலும் பல வாலிபர்கள் இந்தோனேசியாவிலேயே தங்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்ப விரும்புகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவைச் சேர்ந்த 200 வாலிபர்கள் ஆப்கானிஸ்தான் சென்று அல் கொய்தா அமைப்பில் சேர்ந்தனர்.

ஆனால் தற்போது 500 பேர் இந்தோனேசியாவில் இருந்து ஈராக் மற்றும் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள சக்திவாய்ந்த மத அமைப்பின் தலைவர்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தால் நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தோனேசியாவுக்குள் வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அண்மையில் இந்தோனேசியாவில் உள்ள மால் ஒன்றில் குளோரின் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளை அந்த குண்டு வெடிக்கவில்லை. குளோரின் குண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்துவது ஆகும்.

இஸ்லாமிய தலைவர்களும், வாலிபர்களும் ஆதரவு அளிக்கக்கூடும் என்பதால் இந்தோனேசியாவுக்குள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் எளிதில் நுழைய முடியும்.

tamil.oneindia.com