அல்கொய்தா தீவிரவாதிகள் 12 பேர் படுகொலை : மற்ற அமைப்புகளுக்கு சவால்விடும் ஐஎஸ்

al_isicon_001தங்கள் அமைப்பில் சேர மறுத்த மற்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை ஐஎஸ் வீரர்கள் கொன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த அமைப்பினர் ராணுவத்துக்கு எதிராக மட்டுமில்லாமல் மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அல்கொய்தா மற்றும் ஜய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளை கொலை செய்யும் வீடியோவை அவர்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

தங்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட மற்ற அமைப்பை சேர்ந்த 12 பேரிடம் தங்கள் அமைப்பில் சேர ஐஎஸ் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மறுத்ததையடுத்து அவர்களை படுகொலை செய்ய முடிவு செய்தனர். சிரியாவின் டமாகஸ் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படும் அந்த வீடியோவில் மற்ற அமைப்புகளை சேர்ந்த 12 கைதிகளும் அவர்களை படுகொலை செய்த 12 ஐஎஸ் அமைப்பினரும் உள்ளனர்.

முதலில் கைதிகள் தங்களின் தவறுக்காக மன்னிப்பு கேட்கின்றனர். பின்னர் அவர்களின் படுகொலை செய்யப்படுவது பதிவாகியுள்ளது. அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முன் ஐஎஸ் அமைப்பினருக்கும் அல்கொய்தா உள்ளிட்ட மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகளும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதில் பேசும் ஐஎஸ் வீரர் ஒருவர் மற்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் அனைவரும் ஐஎஸ் அமைப்பில் சேரவேண்டும் என்றும் அபு பக்கர் அல் பாக்தாதியை தங்களின் தலைவராக ஏற்கவேண்டும் என்று தெரிவிக்கிறார். இல்லையென்றால் அவர்களுக்கு இதே நிலைமைதான் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ உலக நாடுகள் மட்டுமில்லாமல் மற்ற தீவிரவாத அமைப்புகளிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com