மெல்பர்னில் மாரா அதிக விலைகொடுத்து சொத்து வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து பெர்காசா மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம்(எம்ஏசிசி) புகார் செய்துள்ளது.
பூமிபுத்ராக்களின் உரிமைகள் மருட்டலுக்கு இலக்காகும்போது அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பெர்காசா தலைவர் அஸ்ருல் அக்மால் ஸஹாருடின் கூறினார்.
அக்குற்றச்சாட்டு பொய்யென்று தெரிய வந்தால் அதைப் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“அதே வேளை அது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட ‘குரங்குகளை’, மாரா உயர் அதிகாரிகள், ஒரு முன்னாள் அரசியல்வாதி உள்பட கடுமையாக தண்டிக்க வேண்டும்.
“ஏனென்றால் அவர்கள் செய்தது ஒரு குற்றச்செயல் மட்டுமல்ல. அது மலாய்க்காரர்கலுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகமுமாகும்”, என்று அஸ்ருல் கூறினார்.
அப்பாடா இப்பத்தான் பெர்கசா தவளைக்கு வீரம் வந்துள்ளது.
மோசடி செய்பவர்களைக் குரங்குகள் என்றால் நாட்டை வெளிநாட்டினருக்கு விற்கப் பார்க்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்லலாம்? “அம்னோ ஊத்தான்” என்று சொல்லலாமா!
குரங்கிற்கு குரங்கு பூமாலை சாத்திக்கிட்ட மாதிரி இருக்கு!.
ஒரு தவளையும் ஒரு குரங்கும் நாடகம் ஆடுகிறது .நல்ல அடுட்டம்
குரங்கு கையில் பூமாலை கொடுத்தவனை முதலில் தண்டியுங்கல். அதன் பிறகு அனைத்தும் நல்ல செயல் வடிவம் பெரும்.