தமிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன்.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில் அதிகமாக வேலை செய்தோம். ஓகஸ்ட் 10ம் திகதிக்கு பின் இலங்கை தொடர்பான அறிக்கை வரலாம்.
அவ்வறிக்கை யாருக்கு சாதகம்? போன்ற ஐ.நாவின் முழு விபரங்களையும் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் கூறுகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.
-http://www.tamilwin.com
https://youtu.be/YBjtsuNO-Vk
இலங்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்தியா அமெரிக்க போன்ற நாடுகள் ஐ நா விற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கை ஒருக் காலத்தில் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது. அனைத்துலக சமூகத்திடம் இலங்கையில் நடந்தது வெறும் போர்க் குற்றமில்லை; திட்டமிட்ட இனப் படுகொலைகள் என்பதை உறுதிப் படுத்தி விட்டால், இலங்கை 2 ஆக உடைவதை யாராலும் தடுக்க முடியாது; இந்த உண்மைகள் இந்தியாவிற்கும் தெரியும்; அமெரிக்காவிற்கும் தெரியும். மனித உடலங்களை நாய்கள் தின்னும் அளவிற்கு போர் நடந்த தென்றால் இலங்கையில் நடந்து வெறும் போரல்ல; மனித குலத்திற்கு எதிரான கடும் குற்றங்கள்; இங்கே அமெரிக்கா, சீனா, இந்தியா இவர்களெல்லாம் இந்த குற்றங்களை வேறுக் கண்ணோட்டத்தில் அரசியலாகப் பார்க்கின்றார்கள்; இந்துமகா சமுத்திரத்தில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டார்கள்; இந்த லட்சியத்திற்கு தடையாய்யிருப்பது ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டம்; அமெரிக்கா தன் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார வலிமையை மட்டும் தக்க வைத்துக் கொள்ள இலங்கையை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; சீன நாட்டுத் தலைவர்களை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை; அவர்கள் சத்தியத்திலும் அஹிம்சையிலும் சமாதானத்திலும் அதிக நம்பிக்கையுடவர்கள்; இப்படி ஈழத் தமிழர்களின் தங்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தில் வெற்றிப் பெற்று விட்டால், இந்த நாடுகளுக்கெல்லாம் கடைசியாக மிஞ்சுவது பெரிய ஏமாற்றமே. ஆகையால், ஐநாவில் இலங்கைமேல் உண்மையான போர்க் குற்றங்கள் நடைபெறுவது என்பது வெறும் கேள்விக் குறிதான்.