மாரா இங்க் மெல்பர்ன், ஸ்வேன்ஸ்டன் ஸ்திரிட்டில் மாணவர்கள் தங்குவதற்காக ஒரு அடுக்ககம் வாங்கியதில் நிகழ்ந்துள்ள மோசடியில் மாரா ஆஸ்திரேலிய $18.3 மில்லியனை (ரிம52.7 மில்லியன்) இழந்தது என்கிறார் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி.
மாரா இங்கி-கிடமிருந்து இரகசியமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அந்நிறுவனம் அச்சொத்தை ஆ$41.8 மில்லியனுக்கு(ரிம120.5 மில்லியனுக்கு) வாங்கியதாகக் காண்பிக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலிய அரசு ஆவணங்களின்படி அச்சொத்துக்கு ஆ23.5மில்லியன் (ரிம67 மில்லியன்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ரபிஸிக்கு- இவர் National Oversight and Whistleblowers (நவ்) அமைப்பின் இயக்குனருமாவார்- இவ்விவகாரத்தில் மலேசிய அதிகாரிகள்மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எனவே, அவர் நவ்- இன் இன்னொரு இயக்குனரான அக்மால் நசிர் அடுத்த வாரம் ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமே புகார் செய்வார் என்று அறிவித்தார்.
“நாங்கள் அம்பலமாக்கிய ஊழல் விவகாரங்களில் நாங்கள்தான் லாக்- அப்பில் வைக்கப்பட்டோம். குற்றத்தில் சம்பந்தப்பட்டதாக நாங்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மலேசியாவில் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்திரேலிய சட்டம் வேறு மாதிரி”, என்று ரபிஸி கூறினார்.
எம்.பிகளின் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது..இன்னும் செயல்படுத்த படவில்லை
மாராவின் வரலாற்றில் என்றுமே கணக்கு வழக்கு சரியாக இருந்ததில்லை காரணம் அவர்களுக்கு கணக்கு வழக்கு தெரியாது!.
இந் நாட்டின் வரலாற்றிலேயே எப்போது கணக்கு சரியாக செய்தார்கள்? இந்த ஊழல்வாதிகளின் வங்கி கணக்கு தான் ஏறிக்கொண்டு போனது – இந் நாட்டின் என்ன நடக்கின்றது? எல்லாமே ஊழலும் கண்கட்டி வித்தையுமே– பதவியில் உள்ள ஈன ஜென்மங்களின் ஆட்டம் சகிக்கவில்லை அத்துடன் இவங்களின் பேச்சு அநாகரிகமாகவும் அறிவிலித்தனமாகவும் கேட்கவே எரிகிறது– எப்படி இவன்களெல்லாம் சொரணை இல்லாமல் தங்களை பெரிய தலைகள் என்று என்னுகிரான்கள் என்றே புரிய வில்லை.
சொந்த பணமா இருந்தா தானே வருந்த.
மனசாட்சியுடன் நீதி நேர்மையுடயவருக்குதான் கணக்கு.வழக்கு அவர்கள் தன உழைப்பில் வந்த ஊதியதைதவிர்த்து அடுத்தவர் சொத்திற்கு ஆசை படமாட்டார்கள் இங்கு அப்படியா ?உயார் பதவியில் அமர்திருக்கும் அத்தனைபேரும்அடுத்தவனுக்கு கன்னக்கோல் சாத்தியே வாழும் ஊழால்பெருச்சாளிகள் !
அடுத்தவன் வீட்டு நெய்ய என் பொண்டாட்டி கையனான,,,,,,,,,,, நல்ல இருக்கு கதை, அம் நோ மலைய்காறன ஏமாத்தறான் , ம இ க தமிழனை எமாத்ரான்,எம் சி எ சினனை எமாத்ரான் , நாட்டையே கொள்ளை அடிக்கறாங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,, கீதா ஓரங் மேலயு , கீதா ஓரங் பூமி புளுத்ரா , கீதா ஓரங் முஸ்லிம் , முஸ்லிம்ல நாட்ட லொல்ல அடிக்கலாம் நு சொல்ல பட்டிருக்கு போல……………….
சொந்தமாக சிறு வியாபாரம் செய்யும் எனக்கு ,கணக்கு வழக்கு சரியில்லை என்று அபராதமும் வட்டியும் சேர்த்து ரி.ம.26,000.00 வெள்ளியை 26 மாதம் தவணையில் ரி.ம 1091.00 கட்ட சொல்லி தினந்தோறும் வருமான வரி இலாகா வர்புருட்டராங்க. நான் மன உலச்கல் அடைந்து இருக்கேன் ,வியாபரத்தை முடிவிட்டு வேலைக்கு போயிடலாம்னு இருக்கேன். இவங்க முழு புசணிக்காய சொத்துல வச்சு மறைகுரான்னுங்க. எங்க போயிடுச்சு உழல் ஆணையம்.ஏழைக்கு ஒரு திர்ப்பு அரசியல் வாதிகளுக்கு ஒரு திர்ப்பு.
புலி பாண்டி – அநியாயங்களுக்கு குறைவில்லை — கேட்க நாதி இல்லை. நீதி தேவதை தூங்கிகொண்டிருக்கிறாள் யாருடைய பையில்.? நீதி நியாயம் வெறும் பேச்சுதான். நீதி தேவதையின் வங்கி கணக்கு பெருமளவுக்கு உயர்ந்து இருக்கும் இந்த 57 ஆண்டுகளில்.