பிரான்சில் உள்ள “கலைஸ்” என்னும் இடத்தில் இருந்தே , பிரித்தானியாவுக்கு செல்லும் கப்பல்கள் நிலைகொண்டுள்ளது. அங்கிருந்து தான் பிரித்தானியாவுக்கான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கிறது. குறித்த இந்த இடத்தில் பல நூறுக்கணக்கான அகதிகள் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆபிரிக்கர்கள். அவர்கள் எப்படியாவது பிரித்தானியாவுக்குள் வந்துவிடவேண்டும் என்று , வெறியோடு காணப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து லண்டன் வரும் பார ஊர்தி(லாரிகளில்) ஏறி இவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். எப்படியாவது வாகன சாரதிகளை ஏமாற்றி இவர்கள் பின் கதவை திறந்து ஏறி உள்ளே ஒளிந்துகொள்கிறார்கள். இது தெரியாமல் வாகனத்தை செலுத்தி வரும் சாரதிகள் பொலிசாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
ஏன் எனில் , பிரான்ஸ் நாட்டு எல்லையில் முகாம் போட்டு தங்கியுள்ள பிரித்தானியப் பொலிசார் ஸ்கேனர் ஒன்றை பாவித்து அதனூடாக லாரியை போகச் செய்கிறார்கள். உள்ளே ஒரு எலி இருந்தால் கூட அந்த ஸ்கேனர் காட்டிக் கொடுத்துவிடும். இதனூடாக பலரை அவர்கள் பிடித்துள்ளதோடு , வாகன சாரதிகளையும் கைதுசெய்துள்ளார்கள். இது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் , ஆத்திரமடைந்த பார ஊர்தி ஓட்டுனர்கள் , பலர் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலை தோன்றியுள்ளது. ஆனால் இதனை கூட அகதிகள் சிலர் பயன்படுத்த தவறவில்லை. ரோட்டில் டயர்களை போட்டு எரித்து சிறிய கலவரம் ஒன்றை ஏற்படுத்தி பொலிசாரின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு , லாரிகளில் ஏறவே அவர்கள் எத்தணிக்கிறார்கள்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் , அவர்களில் பலருக்கு அங்கே அதி நவீன ஸ்கேனர்கள் இருப்பது இதுவரை தெரியாது. தாம் பிடிபடுவோம் என்பதும் தெரியாது உள்ளது என்பது தான் என்கிறார்கள்.
-http://www.athirvu.com