பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பணக் கையாடல் செய்துள்ளதாகக் கூறும் பரபரப்பான குற்றச்சாட்டுகள்மீது விசாரணை முடியும்வரை அவரை விடுப்பில் செல்ல அமைச்சரவை வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் டோனி புவா கேட்டுக் கொண்டார்.
“இது கண்ணியமான ஒரு வேண்டுகோள்தான். மற்ற மக்களாட்சி நாடுகள் என்றால் இப்படிப்பட்ட நிலையில் பிரதமர் இந்நேரம் பதவி விலகியிருப்பார்”, என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா கூறினார்.
வால் ஸ்திரிட் ஜர்னலில் வெளிவந்த செய்தி ஒன்று சுமார் யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதை மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக கூறிற்று.
அது 1எம்டிபி-இன் பணமாம்.
மிகப் பெரிய தொகைகள் “பிரதமரின் கணக்குக்கு மாற்றப்பட்டிருப்பது” ஒரு கடுமையான விவகாரமாகும் என புவா குறிப்பிட்டார்.
பினாங்கில், இவ்விவகாரம் பற்றிக் கருத்துரைத்த முதலமைச்சர் லிம் குவான் எங், தம்மீது பழிபோடும் WSJ செய்திக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும், பதிலளிக்க முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும் என்று கூறினார்
WSJ “பிரபலமான” பத்திரிகை என்று குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென்றால் நஜிப் அச்செய்தித்தாளுக்கு எதிராக வழக்கு தொடுத்து தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
நம்பிக்கை நாயகன் WSJ மற்றும் SARAWAK REPORT மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனோ?? சட்ட நடவடிக்கையில் வென்றால், மக்களின் நம்பிக்கை முழுமையாக நம்பிக்கை நாயகனின் மீது திரும்பக் கூடும் அல்லவா??? எப்படி வசதி ??
எல்லோரும் இதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இதை எல்லாம் கேட்டு கேட்டு பிரதமர் காது செவிடாகி விட்டது போல் தெரிகின்றது.
பதவி விலகுவார் அனால் விலக மாடார். இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா. டோனி வேற வேலை பாருங்கள்.தேவை அற்ற வேளைக்கு நேரம் வீனாகாதிர். அடுத்த தேர்தல் இப்பொழுதே வேலை ஆரம்பம் ஆகட்டும்.
இது ஜப்பான் அல்ல – அங்குதான் தார்மீக பொறுப்பேற்று பதவி துறப்பார்கள். இங்கு என்றுமே அது நடக்காது.