வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ)செய்தியை நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான “அரசியல் சூழ்ச்சி”-இன் தொடர்ச்சி எனப் பிரதமர் அலுவலம்(பிஎம்ஓ) வருணித்தது.
உலகளாவிய சவால்களுக்கு எதிராக மலேசியப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக அவர் வழிநடத்திச் சென்று கொண்டிருந்தாலும் தனிப்பட்ட சிலர், நம் பொருளாதாரத்தின்மீதுள்ள நம்பிக்கைக்குக் குழிபறிக்கவும் அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றவும் முனைப்புடன் இருந்து வருகிறார்கள்.
“பெயர் குறிப்பிடாத விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி பிரதமர்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த அண்மைய குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்த அரசியல் சூழ்ச்சியின் தொடர்ச்சிதான்”, என்று பிஎம்ஓ அறிக்கை கூறியது..
ஊடகங்களுக்குத் தவறான தகவல் தெரிவிப்பதற்காக ஆவணங்கள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.
“எனவே, ஊடகங்களில் உள்ள பொறுப்பானவர்கள், ஆவணங்கள் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படாதவரை அவற்றை உண்மையானவையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது”, என்று அது கேட்டுக்கொண்டது.
குற்றச்சாட்டுகளைப் பொருத்தவரை, பிரதமருக்குப் பணம் கொடுத்ததில்லை என்பதை 1எம்டிபி ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.
நம்பிக்கை நாயகனுக்கு இப்ப இந்த பாட்டு பாட வேண்டும் போலிருக்கும்.
https://www.youtube.com/watch?v=-oD7J1WRwVU
திரு தேனீ அவர்களே.ஊரெல்லாம் நபிக்கை நாயகனை கண்டு வியந்தாரா .
இந்த பாட்டில் வரும் சிவாஜியின் கதாபாத்திரம் தான் தனது காதலிக்கு நிரபராதி என்று எடுத்துச் சொல்லவும், அதே வேளையில் அங்கே சுற்றி இருப்பவர்களும், தன்னை குற்றவாளி என்று குற்றம் சுமத்துபவர்களும் எந்த வகையிலும் நல்லவர்கள் என்பதற்கோ அல்லது நேர்மையானவர்கள் என்பதற்கோ தகுதி அற்றவர்கள் என்ற கருத்திலும் அமைந்த பாடல் அது. நம்பிக்கை நாயகனின் நிலையும் இதுதான். மாமக்தீர் தான் பொதுத் தேர்தலிலும் கட்சித் தேர்தலிலும் வெற்றி பெற எத்தகைய ஊழல் வேண்டுமானாலும் செய்து வெற்றி பெற்று இரும்புப் பிடி கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் கறை படிந்த கையின் செயல், நிழலாக இருந்ததே ஒழிய தன் கையை பிறர் காணும்படி வெளியே காட்டவில்லை. அப்படியே வெளியே தெரிந்தாலும் தனது வாய் சாதூரியத்தாலும் அன்றிருந்த ஊடக கட்டமைப்பாலும் சமாளித்துக் கொண்டார். கேள்விக்கு பதில் சொல்லாமலேயே பதில் சொல்லும் தனித் திறன் கொண்டவர் மாமக்தீர். இன்று நம்பிக்கை நாயகனைப் பார்த்து, இன்னொரு ‘உத்தம புத்திரன்’ குறை சொல்வது நமக்கு பெருமையாக இருக்கலாம் அல்லது சாதகமாகவும் இருக்கலாம். ஆனால் மழையில் நனையும் ஆட்டைப் பார்த்து ஓநாய் அழுவது அந்த ஆட்டின் மீது வந்த கருணையால் அல்ல மாறாக தன் சுயநலத்தின் பேரில் வந்த நீலிக் கண்ணீர்தான். தொடரும்.
நம்பிக்கை நாயகனின் நல் உள்ளத்தை அறிந்தவர்களில் ஒருவர் டத்தோ ஹுஸ்னி அவர்கள். ஒரு முறை அவருடன் மற்ற மலாயக்கார்கள் கலந்துக் கொண்ட மூடிய அறையில் நிகழ்ந்த (‘closed door meeting’) கலந்துரையாடும் நிகழ்வில் நானும் கலந்துக் கொண்டேன். நம்பிக்கை நாயகன் எப்படி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு திட்டங்களையும் கூர்ந்து ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதை கருவூல அமைச்சகத்தில் உத்தரவு இடுகின்றார் என்பதை விளக்கிக் கூறினார். நம்பிக்கை நாயகனின் பெரிய குறை “மந்தாரை” – யைப் போன்று ஒரு பெண்ணை தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டதுதான். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது ரோஸ் அக்காவின் செயலில் இருந்து நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இந்த அழகான அம்மா, நம்பிக்கை நாயகனை அவர்தம் குடும்பத்தினர் நெருங்கா வண்ணம் ஒரு வளையத்தை ஏற்படுத்தி விட்டார். இதன் காரணமாகவே நம்பிக்கை நாயகனின் உடன் பிறப்புக்களும் அவரை விட்டு நீங்கவும், அவரை எதிர்க்கவும் காரணமாயிற்று. மேலும் இந்த அம்மாவின் ஆடம்பர வாழ்க்கை முறையே நம்பிக்கை நாயகனின் மீது இருந்து நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் இழக்க நேரிட்டது. கர்ணனை மகா பாரதப் போரில் வெல்ல கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு சூழ்ச்சியைப் போல, உடன் இருந்தோர் நம்பிக்கை நாயகனுக்கு குழி பறித்தனர். ஆனால் அவரால் நன்மை அடைந்த அமீநோகாரர்களின் நடு மட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை நாயகன் வந்த பணத்தைக் கொண்டு அவர்தம் இனத்தின், மற்றும் அவர்தம் கூட்டுரவுகாரர்களுக்கு கொடுத்து உதவியது தெரியும். எப்படி நம்ம தானைத் தலைவர் காரியம் ஆற்றி தனது கட்சி தலைமைப் பொறுப்பை வெகு காலமாக தக்க வைத்துக் கொண்டாரோ அதைப் போலவே இவரும் செய்து வந்தார். அதனால்தான் அமீனோ கட்சியின் நடு மட்ட பொறுப்பில் உள்ளவர்களில் பலரும் இன்று வரை நம்பிக்கை நாயகனுக்கு விசுவாசமாக இருக்கின்றனர். தொடரும்.
மாமக்தீர் இன்று நம்பிக்கை நாயகனை சாடுவதற்கு காரணம் உண்டு. ஒரு காலத்தில் இந்நாட்டு அரசாங்கத்தின் நடப்பு, மலாய்க்காரர்கள் உறிஞ்சி எடுத்த எலும்பு துண்டுதான் பிற இனத்திற்கு கொடுக்கப் பட்டு வந்தது. அந்த நிலை 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மாற வேண்டிய அரசியல் கட்டாயம் ஏற்பட்டது. அதன் விளைவு அமீநோக்காரர்கள் சபா, சராவாக் தோழமை கட்சிகளுக்கு அரசியல் பொறுப்புக்களில் அதிக பங்கீடு செய்ய வேண்டி இருந்தது. மேலும் BR1M வழி அனைத்து இன மக்களும் பயன் பெற நம்பிக்கை நாயகன் வழி வகுத்ததும் மாமக்தீருக்குப் பிடிக்கவில்லை காரணம் சீனனும் பணம் பெருகின்றானே என்ற இனவாதம்தான். மாமக்தீர் தன் இனம் என்று ‘exclusive’ அரசாங்கமாக வழி நடத்தப் பட வேண்டும் என்று விரும்புகின்றார். நம்பிக்கை நாயகனோ அனைத்து இனத்தையும் அரவணைத்துச் (inclusive’) செல்ல வேண்டும் என்று விரும்புகின்றார். இதை மாமக்தீர் பெர்காசவுக்கு கொடுத்த வந்த நேரிடை ஆதரவின் வழியாகவும் அவ்வப்பொழுது மலாய்க்காரர்களின் கூட்டம் இவர் தலைமையில் நடைபெற்று வெளியே வரும் அறிக்கைகளிலும் நாம் கண்டோம். இந்த ‘exclusivity’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடே மாமக்தீர் நம்பிக்கை நாயகனை எதிர்ப்பது மாறாக நாட்டின் மீது உள்ள பற்று பாசத்தாலோ அல்லது நம் மீது உள்ள பற்று பாசத்தாலோ அல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். தொடரும்.
இந்நாட்டின் உள்நாட்டு நிறுவனத்துடன் ஜப்பானின் Mitshubishi Corporation கூட்டுறவு அமைத்து வாகனம் தயாரித்த பொழுது மாமக்தீரின் வெள்ளைக்கார மருமகனுக்கு எப்படி Mitsubishi Corporation – னில் நிர்வாக இயக்குனர் வாரிய பொறுப்பு கொடுக்கப் பட்டது?. ஊழல் இல்லாமலா!. அவனும் சரியில்லை. இவனும் சரியில்லை என்றுதான் நாம் பாட வேண்டும். பின்னவனுக்கு எப்படி திருடுவது என்று தெரியவில்லை. இதுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடு. திருடுபவன் தான் சென்ற வழியை பிறருக்குக் காட்டாமல் செல்வான். மாமக்தீரும், தானைத் தலைவரும் போல. இந்த திருடன் பக்காத் திருடன் அல்ல அதனால்தான் சென்ற வழியை பிறருக்குக் காட்டிக் கொடுத்து மாட்டிக் கொண்டான். “கர்ணா வருவதை எதிர் கொள்ளடா” என்று கிருஷ்ணன், “கர்ணன்” படத்தில் பாடுவதாக இறுதிக் காட்சி வரும். அந்த நிலைக்கு நம்பிக்கை நாயகன் வந்து விட்டார். வாழ்வா சாவா என்பது நம்பிக்கை நாயகனின் “தர்மம்” தான் நிர்ணயிக்க வேண்டும். இப்ப நம்பிக்கை நாயகனுக்காக இந்த பாட்டை நான் பாட விரும்புகிறேன்.
இந்த 58 ஆண்டுகளில் இவனும் இவனை சார்ந்த அம்னோ ஊழல்வாதிகளும் இந் நாட்டை சூறை ஆடி இந் நாட்டை கடனாளி ஆக்கி தங்களின் வங்கி கணக்கை உயர்த்தி எங்கு ஒழித்து வைதிருக்கின்றான்கள். இவன் தற்காப்பு அமைச்சராக இருந்த போது ஊழல் வழி கொள்ளை அடித்து அனுபவம் தான் இதெல்லாவற்றுக்கும் காரணம். கெட நாதி இல்லை என்று அவனுக்கு தெரியும்– 58 ஆண்டு அம்னோவின் அனுபவம்.
ஐய்யா திரு தேனீ அவர்களே.உங்கள் இரண்டாவது பதிவு ஜெயலலிதா
சசிகலா வுக்கு ஒத்துப்போகுது.ஆந்தரா திராச்சை தோட்டம் .ஜெயா உறவினர்களை நெருங்கவிடாமல் செயிது ஊழலுக்கு வழியமைத்து
மீள முடியாத சிக்கலில் இரு தோழிகளும் மாட்டிக்கொண்டார்கள்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயாவின் உறவினர்களே அவருக்கு எதிராக சாச்சியம் அளித்தார்கள்.