ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஒபாமாவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புடின்

putin_obama_001சமரசம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவிலான நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து செயல்பட வேண்டும்.

இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சர்வதேச அளவிலான பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக முடிவு கண்டுபிடிக்கலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் உக்ரையின் விவகாரம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

-http://world.lankasri.com