சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்த கிரீஸ் மக்கள்: ஐரோப்பிய நாடுகள் அவசர ஆலோசனை

greece_refe_001கிரீசில் நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் எதிராகவே வாக்களித்துள்ளனர்.

பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் நாடு தவித்து வருகிறது.

இது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுத்தும் நிலை மாறவில்லை. மேலும் கடன் கொடுத்த நாடுகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள கிரீசுக்கு நிபந்தனை விதித்தது.

இந்நிலையில் இந்த நிபந்தனைகளை ஏற்றுகொள்வதா வேண்டாமா என்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படும் என்று கிரிஸ் பிரதமர் அலெக்சிஸ் டிப்ரஸ் கூறினார்.

எனினும் மக்களிடம் நிபந்தனைகளை ஏற்றுகொள்ள வேண்டாம் என்று வாக்களிக்கும் படியும் அவர் கேட்டுகொண்டார். இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதில் 62% மக்கள் நிபந்தனைகளை ஏற்கவேண்டாம் என்று வாக்களித்துள்ளார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலையில் அந்நாடு உள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியின் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பிரான்சின் ஃப்ரான்கொய்ஸ் ஹொலாண்டே ஆகியோர் இது குறித்து தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இன்று ஒன்று கூடி ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீசின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com