நிலநடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு உதவியாக கோழி மற்றும் மீன்கள் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசாங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நில நடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு கோழிகள், மீன்கள் மற்றும் தேரைகளை ஆய்வில் ஈடுப்படுத்தி வருகின்றனர்.
நில அதிர்வுகளை ஆராயும் அதிகாரிகள் Nanjing நகரில் ஏற்கனவே 7 கோழிகள் மற்றும் மீன்கள் பண்ணைகளை உருவாக்கி, அதனை கண்காணிக்க நபர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.
கண்காணிப்பு பணியில் உள்ளவர்கள், அங்குள்ள உயிரினங்களின் நடவடிக்கைகளை நன்கு கவனித்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர், கோழிகள் நில அதிர்வுகளை உணர்ந்தால், அவைகள் உடனடியாக அருகில் உள்ள மரத்தின் உச்சிக்கு பறந்து சென்று அமர்ந்துக்கொள்ளும்.
மீன்கள் நில அதிர்வுகளை உணர்ந்தால். துள்ளி குதித்துக்கொண்டு தண்ணீருக்கு வெளியே வர முயற்சி செய்யும். மேலும், தேரைகள் கூட்டம் கூட்டமாக நகர்ந்து செல்ல முயற்சி செய்யும் என கூறியுள்ளார்.
இந்த ஆய்வை மேலும் விரிவுப்படுத்த தற்போது உள்ள பண்ணைகளில் எண்ணிக்கையை விட கூடுதலாக 7 பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆனால், சில கோழி பண்ணை உரிமையாளர்கள் இந்த முயற்சிக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகின்றனர்.
பண்ணைகளுக்கு கூட்டமாக வருகை தரும் நபர்களை பார்த்தாலே கோழிகளும் மீன்களும் அசாதராண முறையில் நடந்துக்கொள்ளும். இந்த காட்சியை ‘நிலநடுக்கத்தால் தான் இவ்வாறு நடக்கின்றன’ என தவறாக எண்ணுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் தான் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை எனக்கூறியுள்ளனர்.
உயிரினங்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தை கண்டறிய முயல்வது சீனாவிற்கு இது ஒன்றும் முதல் நிகழ்வு அல்ல, Nanchang நகரில் ஆராய்ச்சி கூடம் ஒன்றை அமைத்து அதில் நாய்களை அடைத்து அவற்றின் மூலம் நிலநடுக்கத்தை கண்டறிய அரசு கடந்த ஆண்டு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com