ஐ.எஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஈராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 111 பள்ளிச் சிறார்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இந்த சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்.
சிறுவர்களை தங்கள் முகாம் களுக்கு அழைத்துச் சென்றுள்ள தீவிரவாதிகள் அங்கு அவர்களை மத போதனைகள் மூலம் மூளைச்சலவை செய்வதுடன், ஆயுதப் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
ஆயுதம் ஏந்தும் அளவுக்கு உடல் வலு இல்லாத சிறார்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்களை கடத்தி சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 78 ஆண்களை தீவிரவாதிகள் கைது என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். ஈராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்த கடந்த ஓராண்டில் 1,420 சிறார்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் அந்த சிறுவர்களைக் கொண்டு பலரது தலையையும் வெட்ட வைத்துள்ளனர்.
சிரியாவில் இதுபோன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமிய அரசை அமைக்கும் சிங்கக் குட்டிகள் என்ற சிறப்பு பெயரையும் அளித்துள்ளனர்.
-http://world.lankasri.com


























