மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா: மனித உரிமை ஆணையாளர்

unsc_zeid_002இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நிலைமைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காணொளி மூலம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யப் போகிறது என்றால் ஐ.நாவின் நோக்கங்கள் உறுதியானதாகவும், தெளிவானதாகவும், பிளவுகளற்றதாகவும் இருக்க வேண்டும்.

2009இல் இலங்கையிலும், இப்போது சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான், புரூண்டி, மியான்மாரிலும் கூட, இவ்வாறிருந்திருந்தால், மில்லியன் கணக்கான மக்களின் மகத்தான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: