தொடர் மரணம் மற்றும் விபத்து எதிரொலி: செல்பிக்கு கட்டுப்பாடு விதித்த ரஷ்யா (வீடியோ இணைப்பு)

russia_selfie_001ஆபத்தான செல்பிக்களை எடுக்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு  ரஷ்ய பொலிசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ரஷ்ய நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் செல்பி எடுக்கும் போது 10க்கும் மேற்பட்ட மரணங்களும் 100க்கு மேற்பட்ட விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் மக்களிடம் பாதுகாப்பான வகையில் செல்பி எடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் பாதுகாப்பான வகையில் செல்பி எடுப்பதால் உயிரை காப்பாற்றலாம் என்று வாசகம் அடங்கிய சிறிய கையேடு ஒன்றை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதில் துப்பாக்கியுடன், விலங்குகளுடன் மற்றும் கட்டிடத்தின் கூரையில் நின்றவாறு செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

-http://world.lankasri.com

https://youtu.be/tgrYhxGnO2o

TAGS: