நிபோங் திபாலிருந்து ஐந்து டிஎபி கிளைத் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக பாஸ் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
நிபோங் திபால் துணைத் தலைவர் தியோ சியாங் ஹூய் தலைமையில் சென்ற டிஎபி பிரதிநிதிகள் பரிசுப் பொருள்களை பரிமாறிக் கொண்டனர்.
பல்லின சமூகத்திற்கு சேவையாற்றும் கடப்பாட்டிலிருந்து முஜாஹிட் தயங்கியதேயில்லை என்று கூறிய தியோ, 2008 ஆம் ஆண்டிலிருந்து டிஎபி அவருடன் இணைந்து செயலாற்றி வருகிறது என்றார்.
முஜாஹிட் பாஸ் கட்சியின் மத்திய முழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால் அவர் அனைத்து மலேசியர்களின் உள்ளத்திலும் சிந்தனையிலும் இடம் பெற்றுள்ளார் என்றார் தியோ.
ஒரு நவீன, மிதவாத மற்றும் பல்லின கட்சியை அமைக்கும் திட்டத்தை முஜாஹிட் கொண்டிருப்பாரேயானால், நாங்கள் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று பாரிட் புந்தார் முஜாஹிட் சேவை மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தியோ கூறினார்.
நான் யாருக்கும் கையாள் இல்லை
டிஎபி தலைவர்கள் தமது அலுவலகத்திற்கு வருகை அளித்தது தமக்கு பெருமை அளிப்பதாக முஜாஹிட் கூறினார்.
டிஎபி அளிக்கும் ஆதரவு இன அல்லது சமய வேறுபாடற்ற அனைத்து மலேசியர்களுக்காக சேவையாற்றுவதற்கான புதிய நம்பிக்கையையும் வலுமையையும் தமக்கு தந்துள்ளது என்றாரவர்.
“எனது தந்தை பாஸ்சை தோற்றுவித்தவர். நான் எவருடைய கையாளாகவும் இருக்கு முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நான் நட்புறவு மற்றும் விசுவாசம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறேன்”, என்று முஜாஹிட் மேலும் கூறினார்.
அடங்கப்பா …உலக மகா நடிப்புடா சாமி…
எதாவது உருப்படியான அணைத்து மலேசியர்களுக்கும் நல்ல கூட்டனியை உருவாக்குங்கள்.மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்கின்றனர்.