பாஸின் ‘முற்போக்கு’ உலாமாக்கள் புதிய நம்பிக்கையில் சேரக்கூடும்

rawaபாஸ்  கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  18 பேரடங்கிய ‘ஹராபான்  பாரு’(புதிய நம்பிக்கை)  அணி கட்சித் தலைவர்களிடம் அதிருப்தி  அடைந்துள்ள  உலாமாக்களை  இன்று  சந்திக்கிறது.

இந்த  உலாமாக்கள், புதிய  நம்பிக்கை  புதுக் கட்சி  அமைப்பதையும்  டிஏபி-யுடனும்  பிகேஆருடனும் சேர்ந்து  புதிய  கூட்டணியை  உருவாக்குவதையும்  ஆதரிக்கிறார்கள்  என  பாஸ்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யூசுப்  ராவா  கூறினார். ஆனால், அவர்  உலாமாக்களின் பெயர்களை  வெளியிட  மறுத்தார்.

“புதுக்  கட்சி  பற்றி  ஹரி  ராயாவுக்குப் பின்னரே  தெளிவாக  தெரிய  வரும். இப்போது  பல்வேறு  தரப்பினரை  இரகசியமாக  சந்தித்து  வருகிறோம். நோன்பு  திறப்பு  நிகழ்வுகளில்  பொதுமக்களுடனும்  கூட்டங்களும்  நடத்தப்படுகின்றன”, என்றாரவர்.