கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ இணைப்பு)

greece_revolticon_001கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது.

இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றத்தின் முன் குவிந்தனர்.

திடீரென அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அவர் பெட்ரோல் குண்டுகளை பொலிசாரை நோக்கி வீசினர்.

எனவே பொலிசாரும் கண்ணீர் குண்டுகளை வீசி அவர்களை விரட்டினர்.

இதனால் ஏத்தன்ஸ் நகரமே போர் களம் போல் காட்சியளித்தது. மேலும் கிரீஸ் விவகாரம் குறித்து தொலைப்பேசி வாயிலான உரையாடல் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com