மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடிய ரஷ்ய ஆதரவு படையினர்: ஓர் ஆண்டு கழித்து வீடியோ வெளியானதால் சர்ச்சை (வீடியோ இணைப்பு)

mal_airicon_001உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை ரஷ்ய ஆதரவு படையினர் தேடிய வீடியோ வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவுக்கு மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.ஹெச் 17 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் உக்ரைன் அருகே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் மரணமடைந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் என்று உக்ரையின் குற்றம்சாட்டியது.

இந்த புகாரை ரஷ்யா மறுத்து வந்தது. இந்நிலையில் வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணத்தவர்களின் உடமைகள் மற்றும் கருப்புபெட்டியை ரஷ்ய ஆதரவு படையினர் தேடிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மலேசிய விமானத்தை போர் விமானம் என கருதி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாகவும், பின்னர் இறந்தவர்களின் உடலை பார்த்தது இது பயணிகள் விமானம் என்று கூறுவதும் அதில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் வரை பொது மக்களை இந்த பகுதியில் அனுமதிக்கக்கூடாது என ஆதரவு படையின் தலைவர் கட்டளையிடுவதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஒரு ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com