உண்ணாமல், உறங்காமல் வேலை செய்யும் கிரீஸ் பிரதமர்: தாயார் உருக்கம்

kiris_pm_001கிரீஸ் நாட்டு பிரதமர் இரவும் பகலும் உழைக்கிறார் என்று அவரது தாயார் கூறியுள்ளார்.

ஐரோப்பியாவின் கூட்டமைப்பு நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து கிரீஸ் நாடு சிக்கன நடவடிக்கைக்கு சம்மதித்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளன.

இந்த சிக்கன நடவடிக்கையை மக்களின் எப்படி கொண்டு செல்வது, நாட்டை எப்படி காப்பாற்றுவது என அந்நாட்டின் அலெக்சிஸ் சிப்ராஸ் தூங்காமல் சாப்பிடாமல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமரின் செயல்பாடு குறித்து அவரது 73 வயது தாயார் அரிஸ்டி சிப்ராஸ் கூறும்போது, சமீப காலமாக அலெக்சிஸ் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கிறான். நாட்டை முன்னேற்றுவதற்கு வேறு வழியில்லை. மக்கள் அவன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கைமாறு செய்ய அவன் கடன்பட்டுள்ளார்.

ஏர்போட்டில் இருந்து நேராக நாடாளுமன்றம் செல்கிறான். அவனது குழந்தைகளை பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் எப்படி எங்களை பார்க்க முடியும். அவனை பார்ப்பதே அரிதாக உள்ளது.

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உடல்நலத்தையும் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் நாங்கள் கூறினோம். ஆனால், என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும் என்று அலெக்சிஸ் கூறியதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com