1எம்டிபிமீது விசாரணை மேற்கொண்டுவரும் பணிக்குழு, நிறுவன இயக்குனர் ஒருவரை விசாரணைக்காக நான்கு நாள்களுக்குத் தடுத்து வைத்துள்ளது.
அந்நபர் திங்கள்கிழமை கேஎல்ஐஏ_இல் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அவரின் வழக்குரைஞரான ஷாபி அப்துல்லா அது “தேசிய நலன்” சம்பந்தப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டதாக ஸ்டார் ஆன்லைன் கூறியது.
“விசாரணையாளர்கள் அவரை ஏழு நாள்களுக்குத் தடுத்துவைக்க அனுமதி கேட்டனர். ஆனால், மாஜிஸ்ட்ரேட் நான்கு நாள்கள் மட்டுமே கொடுத்தார்”, என ஷாபி தெரிவித்தார்.
அந்நபர், 39, இப்போது ஒரு பெரிய சொத்து நிறுவனத்தில் வேலை செய்வதாக தெரிகிறது.
சும்மா நெத்திலி மீன் எல்லாம் பிடித்து நேரத்தை வீணாக்குகின்றார்கள். திமிங்கலத்தைப் பிடிங்கப்பா.
“1MDB”-யின் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் “தேசிய நலன்” கருதி கொள்ளையிட்டார்கள் என்று கருதலாமா ?
அட கொன்யால ! லஞ்சம் என்பதற்கு உதாரணம் “BR1M” என்றால் அரசாங்க நிறுவனத்தின் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு பெயர் “தேசிய நலன்”, நல்லாயிருக்கே அப்படியானால் “DEWAN BAHASA PUSTAKA” மலேசியாவுக்கென அகராதியில் லஞ்சம் என்றால் “BR1M” ; கொள்ளை என்றால் தேசிய நலன் என்று மாற்றம் செய்து விடலாமே !
எங்கள் பிரதமர் மீது பொய் குற்றம் சுமத்துகிறார்கள் என அறிக்கை விட்டு ஆதாயம் தேட முன் வந்துள்ள வேள்பாரி போன்ற நல்லவர்கள் உண்மை அறிந்து இனி பேச வேண்டும் என்பதை உணர vendum.
வேள்பாரியா ? எந்த வேள்பாரி ? ..ம்…ம்…ம்.. சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகையின் மரணத்தில் சம்பந்தபட்டவர் என்று தமிழ் பத்திரிக்கையில் பரபரப்பாக செய்திகள் வெளியானதே அந்த வேள்பாரியா ?
இனம் அது இனத்திற்கு வக்காலத்து வாங்குவது இயல்புதானே !
இனம் அது இனத்திற்கு வக்காளதது வாங்கும் என்பது சரியான போடு