ஈரானைப் போல் வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை என வட கொரியா அறிவித்தது.
தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதற்காக, வல்லரசு நாடுகளுடன் கடந்த வாரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த நிலையில், ஈரானைப் போலவே பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவும் வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஈரானைப் போல வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை.
நாங்கள் ஏற்கெனவே அணு ஆயுதம் தயாரித்துவிட்டதால், இந்த விவகாரத்தில் எங்களையும், ஈரானையும் ஒப்பிட முடியாது என்றார் அவர்.
-http://www.dinamani.com
இப்படிதான் சாடமும் வீராப்பு பேசிக்கிட்டு இருந்தாரு. கடைசியில் கழுத்து துண்டா அறுந்து சாகலையா. அதே நிலைமைதான் இந்த சர்வாதிகார அரசாங்கத்திற்கும்.