குப்பை கூளமாக காட்சியளிக்கும் கிரீஸ் தீவுகள் : அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அகதிகள்

greece_refug_001கிரிஸ் நாட்டின் தீவுகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு போரின் காரணமாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக கிரீஸ் நாட்டின் லெஸ்பொஸ் தீவில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கழிவறைகள் சுத்தமின்றி இருப்பதாகவும், இடமில்லாததால் மக்கள் வீதிகளிலேயே கூடாரம் அமைத்து தங்க வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெக்தத் மெகமத் என்பவர் கூறியதாவது. எனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிரியாவில் இருந்து வந்துள்ளேன்.

இங்கு காலை உணவாக ஒரு குடும்பத்துக்கு ஒரு ரொட்டி துண்டு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காரா டெபி அகதிகள் முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகள் பால் கூட கிடைக்காமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்துதர ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

-http://world.lankasri.com