பாங்காங்கில் இறந்த குழந்தைகளின் உடலை வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த சோவ் ஹோக் குவுன் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ரூ.4 லட்சம் (சுமார் 6400 டொலர்) கொடுத்து இறந்து குழந்தைகளின் 6 உடல்களை வாங்கியுள்ளார்.
இந்த உடல்களை தவானுக்கு கடத்த திட்டமிட்டிருந்தபோது ஹொட்டலில் தங்கியிருந்த இவரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் இவர் வைத்திருந்த குழந்தைகளின் உடல்கள் அனைத்தும் 2 முதல் 7 மாத கருவாக இருந்தன, அவை அனைத்தும் வறுக்கப்பட்டு தங்க இழைகளால் சுற்றப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த உடல்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமாகவும், பணக்காரராக மாறலாம் என வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.
சூனியம் மற்றும் மந்திர தந்திர செயல்களுக்காக இணையதள விளம்பரம் மூலம் பணக்கார வாடிக்கையாளர்கள் இதனை வாங்கி வருகின்றனர்.
தற்போது, இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட சோவ்க்கு ஒருவருடமாவது தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
-http://world.lankasri.com
…………………………இந்த தகவல் சியாம் புத்தாபிக்கு ஒருவர் எனக்கு அதரத்தோடு சொன்னார்