
உலகத்தில் உள்ள மனிதர்களோடு கலக்காமல் , இன்றுவரை காடுகளில் வாழும் ஒரு இனம் இருக்கிறது. இதனை கடந்த 2013ம் ஆண்டு தான் சிலர் தற்செயலாக கண்டுபிடித்தார்கள். ஆமசூன் காடுகளில் வாழும் இந்த இன மக்கள் இதுவரை வெளி உலகத்தை பார்த்ததே இல்லை. தமது காடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தனது காட்டை விட்டு வெளியேறி எங்கேயும் செல்வதும் இல்லை. இன்ரர் நெட், TV , கணணி ஏன் ஒரு நல்ல உடுப்பை கூட இவர்கள் பார்த்தது இல்லை என்றால் நம்புவீர்களா ? சமீபத்தில் ஆளில்லா விமானம் ஒன்றை அனுப்பி சிலர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இங்கே உள்ளது. மேலும் அவர்கள் அம்பு வில்லு கொண்டு அந்த விமானத்தை தக்கவும் முற்பட்டுள்ளார்கள்.
அதுபோக , சில தினங்களுக்கு முன்னர் ஒரு குழு மிகவும் மறைவாகச் சென்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார்கள். லத்தீன் அமெரிக்க நாடான “பெரு” என்னும் நாடு மிகவும் பெரிய நாடாகும். இங்கே தான் உலகிலேயா மிகவும் அரியவகையான காடுகள் , மூலிகை நிறைந்த மரங்கள். அடர்ந்த காடுகள் உள்ளது. அதுபோல இங்கே தான் மிகக் கொடிய மிருகங்களும் உள்ளது. ஒரு முறை குறித்த காட்டினுள் சென்றால் பின்னர் வெளியே வருவது என்பது மிகவும் கடினமான விடையம். ஜி.பி.எஸ் மற்றும் திசையறி கருவி கூட இந்த அடர்ந்த காடுகளில் வேலைசெய்யாது என்கிறார்கள். அப்படியான ஒரு இருண்ட காட்டில் தான் இந்த இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த ஆமசூன் காடுகளில் வசிக்கும் , இந்த இன மக்களை தயவு செய்து தொல்லைப்படுத்த வேண்டாம். அவர்கள் தமக்கு ஏற்றால் போல வாழட்டும் என்று பெரு நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சிலர் ஆர்வக் கோளாறில் அங்கே படை எடுக்கிறார்கள். அதிலும் விஞ்ஞானிகள் பலர் அங்கே செல்ல ஆரம்பித்துள்ளார்கள். எந்த ஒரு மருந்தையும் பாவிக்காமல் இதுவரை காலமும் அவர்கள் உயிரோடு அழியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் , அவர்கள் உடல் மற்றும் ரத்தம் மிகவும் நோய் எதிர்ப்பு சக்த்தி மிக்கதாக இருக்கவேண்டும் அல்லவா ? அதனை எப்படியாவது பரிசோதித்துவிடவேண்டும் என்று ஒரு கூட்டமும். அதனை வைத்து எப்படி மருந்துகளை கண்டு பிடித்து அதனை வியாபாரம் செய்யலாம் என்று ஒரு கூட்டமும் அலைகிறது. ஆனால் இயற்கையோடு ஒத்து வாழும் இம்மனிதர்களை அவர்கள் போக்கில் விடுவதே நல்லது.
-http://www.athirvu.com






























பாவிகளா அவர்களாவது நிம்மதியாக விடுங்கடா !