தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) சரவாக் ரிப்போர்ட் அகப்பத்தை தடை செய்திருந்தாலும் முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் 1எம்டிபி பற்றி தொடர்ந்து எழுதப் போவதாக சூளுரைத்தார்.
சரவாக் ரிப்போர்ட் மீது எம்சிஎம்சி விதித்துள்ள தடை அவருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று வினவப்பட்ட போது, “நான் (1எம்டிபி பற்றி) தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்”, என்றாரவர்.
உள்ளூர் ஓன்லைன் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களோடு எம்சிஎம்சி நடத்திய கூட்டம் பற்றி கேட்ட போது, ஊடகங்களை தணிக்கை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இக்கூட்டம் நிரூபிக்கிறது என்று மகாதிர் கூறினார்.
“ஊடகத் தணிக்கை செயலளவில் அமலில் இருக்கிறது” என்று அவர் சுருக்கின்று பதில் அளித்தார்.
நீங்க எழுதுங்க , சாமானிய மக்கள் எழுதினால் சங்குதான் !
இவரை உள்ளே தள்ள எந்த காவல் ஞமளிக்கும் தைரியம் இல்லையோ?
மகாதிமிருக்கு மகா மகா திமிர்தான்! நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ, இந்த வயதிலும் அஞ்சாமல் சூளுரைக்கிறாரே, அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
நம் போலிஸ் தலைமை புலி mums விசயத்தில் எலி .
தி எட்ஜ் பத்திரிக்கையைத் தடை செய்திருக்கிறார்களே அது பற்றியும் கொஞ்சம் காரசாரமாக எழுதங்களேன்! இப்போதைக்கு அவர்களுக்கு நீங்கள் தான் வில்லன்!
தற்போது நீங்கள்தான் ஹீரோ ம் ………..ம் ……..நடத்துங்கள் !
அச்சம் என்பது மடைமைடா அஞ்ஜாமை என்பது மகாதீரடா!.
உங்கள் ஆட்சியில் குறை சொன்னால் பிடிக்காது.இப்பொழுது வேறு விதமாக செயல்படுகிரிர்களே? உங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?
எழுதுங்கள் உங்கள் நெஞ்சு வெடித்து சாகும் வரை எழுதிக்கொண்டு இருங்கள் வாழ்த்துக்கள் .