உணவுக்காக தீவில் தனியாக போராடும் குரங்குகள் : காரணம் யார்?

mon_food_001லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன.

அமெரிக்காவின் நியூயொர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இதை கைவிட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த மனித குரங்குகளை பராமரிப்பதற்கான பணத்தையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதனால் சுமார் 66 குரங்குகள் உணவுகள் இன்றி தவித்துவருகின்றன. மேலும் இந்த குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மற்றும் பாதுகாப்பதற்கு மாதத்திற்கு 20 ஆயிரம் பவுண்ட் தேவைப்படுவதாக விலங்குகள் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது சில பாதுகாவலர்கள் மட்டும் இந்த குரங்குகளுக்கு படகுகளில் வந்து உணவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com