கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் “தகவல்சொல்லிகளை சுட்டுத் தள்ளாதீர்” என அம்னோ தலைவர்களை எச்சரித்துள்ளார்.
“சில தலைவர்களுக்கு அறிவுரை பிடிக்காது. அவர்களை இடித்துரைத்தால் அப்படிச் செய்பவர்களைச் சுட்டுத் தள்ளுவார்கள்”, என இன்று கோலாலும்பூரில் செராஸ் அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது முக்ரிஸ் கூறினார்.
இப்படிப்பட்ட தலைவர்கள் தகவல் சொல்பவர்களை வேட்டையாடுவார்களே தவிர எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
இது அச்சப்படும் கலாச்சாரத்தை உருவாக்கிவிடும் என்றவர் எச்சரித்தார்.
“இது ஆபத்தானது. இது தொடர்ந்து நடந்தால் மக்கள் வாய் திறக்கத் துணிய மாட்டார்கள்.
“அப்போது பிரச்னைகள் எழுந்தால் அவர்கள்(தலைவர்கள்) சொந்தமாகத்தான் தீர்வு காண வேண்டியிருக்கும்(மற்றவர்கள் உதவ மாட்டார்கள்)”, என்றார்.
முக்ரிஸ், தம் தந்தையார் மகாதிரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
தாம் சொல்லும் எதையும் நஜிப் கேட்பதில்லை என்று ஆதங்கப்படும் மகாதிர், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் நஜிப்பைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். நஜிப் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாவம் அப்பாவுக்காக மகன் வக்காலத்து வாங்குகின்றார். இதையேதான் லிம் கியாட் சியாங் பல மாமாங்களாக உங்க அப்பாவுக்கு சொல்லி வந்தார். அப்ப உங்க அப்பாவுக்கு காது கேட்கலையே. இப்ப மட்டும் என்ன அம்னோ தலைவர்களுக்குக் காது கேட்கவா போகின்றது.
அந்த வசனத்தை உன் அப்பனிடம் சொல்! எங்கள் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து,இன்று நல்லவர்கள் போல் நாடகம் ஆடும் உங்கள் திருட்டு கூட்டத்திற்கு சொல்! எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தடயங்களை அழித்து விட்டால் வலயங்கட்டி அறிவாளி என பொருளாகாது!!!
அன்று உன் அப்பன் பத்திரிக்கை சுதந்திரத்தை சுட்டு தள்ளியது உனக்கு தெரியாதோ முக்காகாரிஸ் அவர்களே? அன்று உன் அப்பனுக்கு ஒரு சட்டம் இன்று ஒரு சட்டம்? என்ன கொடும சார் இது.
தன வினை தன்னை சுடும் .
எல்லாம் முக்ரிசை பிரதமராகுவதற்கு தான் . இந்த நடனம் . சங்கிலி முத்து சாமிவேலுவும் அதனை பின்பற்றுகிறார். ஆனால் முகிரிஸ் ரிகோர்ட் . வீல்பாரி ர்கார்ட் ஒப்பிடவும் ஊத்தி ரிகார்ட்தான்
டேய் முக்ரிஸ் முண்டம்………….. உன் அப்பன் கத்து தாந்த பாடமடா …………………..