ஐந்தாம் தலைமுறை ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக முடித்த சீனா

china_rocket_001முதன்முதலாக சீனா 1970ல் லாங் மார்ச்-1 என்ற ராக்கெட்டை செலுத்தி டாங் பேங் ஆங்-1 என்ற செயற்கைக்கோளை புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியது.

இது வரை 200க்கும் மேற்ப்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியுள்ள சீனா தற்போது அதிநவீன ஐந்தாம் தலைமுறை லாங் மார்ச்-5 ராக்கெட்டின் எரிசக்தி சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தற்போதுள்ள இதேவகை ராக்கெட்டுகளை விட இது இருமடங்கு அதிகமான எடையை (25 டன்) சுமந்து செல்லும்.

சந்திரன் ஆய்வு திட்டத்தில், விண்வெளியில் சுற்றுவது, நிலவில் தரையிறங்குவது, பூமிக்கு திரும்புவது ஆகிய மூன்று முக்கிய நிலைகள் மற்றும் விண்வெளியில் ஆய்வுக் கூடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கான இறுதி வடிவமாக, இந்த புதிய ராக்கெட்டை சீனா
உருவாக்கி உள்ளது.

-http://world.lankasri.com