அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழுமானால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்ப்புக்குரல் எழுப்பும் முகைதின் யாசினைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கும் சாத்தியம் இருக்கிறதா?
இரண்டு தசாப்தங்களாக அமைச்சரவையில் உள்ள ஒருவரைத் தூக்கி எறிவது அவ்வளவு எளிதல்ல என்கிறார் தஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆசியக் கழகத்தின் இயக்குனராகவுள்ள ஜேம்ஸ் சின்.
அதனால் ஏற்படும் விளைவுகளைப் பிரதமர் எண்ணிப் பார்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு ஏற்பட்ட நிலையையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“மகாதிர் (துணைப் பிரதமர்களாக இருந்த) மூசா ஹித்தாமையும் கபார் பாபாவையும் கழட்டிவிட விரும்பியபோது அவர்களும் வெளியேறத் தயாராக இருந்தனர்.
“ஆனால், அவர் அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்தபோது கிட்டத்தட்ட கட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் நஜிப் முகைதினைத் தூக்க நினைத்தால் அது எளிதாக இராது”, என்று சின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நேற்று செராஸ் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் முகைதின் ஆற்றிய உரைமீது கருத்துரைத்தபோது அந்த ஆய்வாளர் இவ்வாறு கூறினார்.
ஆனால், முகைதினின் பேச்சை வைத்து அவர் நஜிப்பைப் பதவி இறங்கச் சொல்வதாக முடிவு செய்துவிடக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
முகைதின் பல வாரங்களுக்கு முன்பும் இதே கருத்தைச் சொன்னார் என்பதையும் சின் சுட்டிக்காட்டினார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஜனநாயக, பொருளாதார விவகாரங்களுக்கான கழக(ஐடியாஸ்)த் தலைவர் வான் சைபுல் வான் ஜானும் சின்னைப் போன்றே கருத்துரைத்தார். மேலும், தி எட்ஜ் நாளேட்டுக்கான தடைவிதிப்பு நஜிப்பின் செல்வாக்கைக் குறைப்பதற்கான “திட்டமிடப்படாத சதி”போல் அமைந்து விட்டது என்றும் சொன்னார்.
“தடை விதித்தது (உள்துறை அமைச்சர்) அஹ்மட் ஜாஹிட்-ஆக இருக்கலாம். ஆனால், அனைவரின் கண்களும் நஜிப்பின்மீதுதான்.
“நஜிப் (1எம்டிபிமீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு) பதில் அளிப்பதுடன் (நாளேட்டுக்கு விதிக்கப்பட்ட) இடைநீக்கத்தை நீக்கும்படியும் உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்த ஊடகம் தவறு இழைத்திருப்பதாக அரசாங்கம் கருதினால் அதற்கெதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என வான் சைபுல் கூறினார்.
முகைதினின் பேச்சு பற்றிக் குறிப்பிட்ட அவர் அது “கண்டிக்கும் உரைதான்” என்றார்.
“முகைதின் சொன்னது எல்லாமே சரியாகக்கூட இருக்கலாம். நஜிப் முகைதினின் கூறியதைக் கவனமாக ஆராய வேண்டும்.
“எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர்(நஜிப்) பதில் சொல்லத்தான் வேண்டும்”, என்றார்.
மலேசியா கோவிந்தா, கோ…..விந்தா! அருகிலுள்ள சிங்கப்பூரை பின்பற்றி நம் நாட்டை ஒரு நல்ல நிலைக்க கொண்டு வர இயலாத அரை வேக்காடுகளின் கைகளில் சிக்கி, நாடு சின்னா பின்னமாகிக் கொண்டு வருகிறது.
பங்காளிக்குள் ஒக்கே….லா தான்
சின்னாப் பின்னமாகிப் போன பொருளாதாரத்தால் உலகமே மலேசியாவைக் கண்டு சிரிப்பா சிரிக்கப் போகுது.
தன் மதத்தை முன் வைத்து இனத்தை பின் வைத்து நாட்டை அதன் பின் வைத்தவன் பதவி இழந்தால் மகிழ்ச்சியே ,,,,இக்கேடு கெட்டவன் அடுத்து பிரதமராக வந்தால் ,,,,,,மலேசியா ,,,,,, முஸ்லிம்மாசிய ஆகிவிடும் ,,,,
எதற்கு எடுத்தாலும் சிங்கப்பூர் …முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்..அங்கு நாம் எதிர்பார்க்கும் பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது…சீனா மாதிரி உள்ளே தான் போகணும் …அங்கு இன்றும் ISA அமுலில் இருக்கிறது…அதனால்தான் சீனன் மூடிக்கொண்டு இருக்கிறான்..இல்லேயேல் இங்கு மாதிரி அங்கேயும் தன் வேலையை காட்டிருப்பான்.