உடல்நலக் குறைவு காரணமாக தமது சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) பதவி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது தமக்கே தெரியாது என்கிறார் அப்துல் கனி பட்டேய்ல்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் அப்படி ஓர் அறிவிப்பைச் செய்தது தமக்குத் தெரியாது என கனி மலாய் மெயில் ஆன்லைன் இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.
“எனக்குத் தெரியாது. பரவாயில்லை. அதைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை”, என்றாரவர்.
கனிக்கு அக்டோபர் 6-இல்தான் வயது 60 ஆகும். அதுதான் அரசாங்க ஊழியர்கள் பணிஓய்வு பெறும் வயதாகும்.
எல்லாரும் கூட்டு “களவாணிகள்” இவங்களுடைய பேச்சை நம்பவே முடியாது.
சட்டி சுட்டதடா கை விட்டதடா. புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்தடா. வீட்டுக்குப் போடா!.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்து விடும்.”
கவியரசு கண்ணதாசன்
பயணம் முடிந்து விட்டது. சட்டி பொட்டி எல்லாம் கட்டிக் கொண்டு கப்பலேறு மவனே. ஆடிய ஆட்டமென்ன. போட்ட நடனமென்ன. இன்றோ கேப்பாற்ற பிள்ளையாய் பரிதவிக்க நடுத்தெருவில் போட்டு விட்டானே நம்பிக்கை நாயகன்.
பார்த்தீர்களா?உங்கள் உடல்நலக் குறைவை அரசியல்வாதிகள் முடிவு செய்கிறார்கள்! இந்த அரசியல்வாதிகளை நம்பித்தான் இத்தனை ஆண்டுகள் மக்களுக்குத் துரோகம் செய்து வந்தீர்கள்! இப்போது உங்களுக்கே துரோகம் வந்துவிட்டது!
தன் வினை தன்னைச் சுடும்…
சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்…! நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!
தூங்கி எழுந்து பெனாற்றுகிரான்.