முகைதின் யாசினும் பிஎன்னுக்கு விசுவாசமாகவுள்ள மற்ற எம்பிகளும் எதிரணியினருடன் சேர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இது மலேசியாவைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என கெராக்கான் ஹராபான் பாரு (ஜிஎச்பி) தலைவர் முகம்மட் சாபு, 16 டிஏபி, பிகேஆர், ஜிஎச்பி எம்பிகளுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“இடைநிலை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம்.
“முகைதினும் அவரின் ஆதரவாளர்களும் நாட்டின்மீது அன்பு கொண்ட பிஎன் எம்பிகளும் நஜிப்புக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்வழி ஓர் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு உதவ இதுவே தருணமாகும்”, என மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் இடைக்கால அரசாங்கத்துக்கு ஒராண்டுக் காலம் தலைமை ஏற்க இடைக்காலப் பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இடைக்காலப் பிரதமராக முகைதின், அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, மாட் சாபு, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாம், ஷாரிர் அப்துல் சமட் போன்ற மூத்த தலைவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
நஜிப்பின் அரசியல் போராட்டத்துக்காக நாட்டைப் பலி கொடுக்கக் கூடாது என மாட் சாபு கூறினார்.
“கடந்த சில வாரங்களாக அம்னோவின் உள்பூசலில் நாடும் இழுக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.
1எம்டிபி ஊழலை விசாரிக்கும் சிறப்புப் பணிக் குழுவும் இரண்டாக பிரிந்து கிடப்பதிலிருந்து இது தெரிகிறது. ஒரு தரப்பு நஜிப்பைக் காப்பாற்ற முயல்கிறது. இன்னொன்று அவர்மீது வழக்கு தொடுக்க விரும்புகிறது.
“நஜிப்பின் நிலையை வலுப்படுத்துவதற்காக முகைதினும் மூத்த அமைச்சர்களும் கழட்டி விடப்பட்டுள்ளனர்”, என சாபு குறிப்பிட்டார்.
முகைதினும் ஜிஎச்பி-இல் சேர வேண்டும் என்று சாபு வேண்டிக் கொண்டார்.
எலும்பு துண்டுக்கு ஆசைபடும் நன்றியுள்ள மனிதர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை யாரும்
காப்பாற்ற முடியாது ..
உங்கள் எண்ணம் கனவாக இருக்கலாம்,நிஜமாகமுடியாது.பொதுத்தேர்தல் வழியே மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை…! வெற்றிப் பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை….!
எதிர் கட்சியினர்களே கனவு காணாதீர்கள்,பார்லிமாண்டில் பன்னாடை பன்டி,,,கார் உங்களை நம்பிக்கை இல்ல தீர்மானத்தை கொண்டுவரவிடுவான?இந்த நாட்டில் யாரும் உண்மையை சொல்ல கூடாது.சொன்னால் பதவி பறிக்கப்படும்,அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்,இந்த நாட்டில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை புத்கத்தில் படிக்கதான் முடியுமே தவிர அனுபவிக்க முடியாது,
தன் இனத்தை கூறுபோடும் அரசில்வாதிகளும் முல்லநரிகளும் கூடஇருந்த இப்படிதான் …நாடு உருப்பட்டமாதிரித்தான் மரம் ஏறி தேன் எடுப்பவன் தேனை நக்காமல் இருக்கமாட்டான் அதர்குனு இப்படியா எல்லா தேனையுமா நக்குவது ….இந்த நாட்டுல இப்படிதான் அரசியல் ஓடிகிட்டுடிருக்கு ….இன்று இந்திய நாணயமும் மலேசியா நானையமும் சமஅளவுக்கு வந்துவிட்டது இதற்க்கு யார் காரணம் அரசியல்வாதிகளே காரணம் …1 லஞ்சம் உழலல்
திருடனாபாத்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது…….இன்னும் கொஞ்சநாளில் மலேசியாவை விடுவானங்க…..நல்ல அரசியல்வாதிகள்
எதிர் கட்சியினர்களே கனவு காணாதீர்கள்.நம்பிக்கையில்ல தீர்மானத்தை நீங்கள் பார்லிமண்டுக்கு கொண்டு வர முடியுமா?உங்களை கொண்டுவரத்தான் விடுவான?பன்னாடை[பன்றி] பன்டி,,,,கார்.இந்தா நாட்டில் உண்மையை சொன்னால் பதவி பறிக்கப்படும். இல்லையென்றால் சிறை செல்ல தயராக இருக்க வேண்டும்,இந்தா நாட்டில் ஜனநாயகம் என்றல் என்ன என்பதை புத்தகத்தில் தான் படிக்க முடியுமே தவிர அதை அனுபவிக்க இந்தா நாட்டில் யாருக்கும் உரிமையில்லை.
யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஆதரவு கிடைக்கும். அது தான் அரசியல்!