பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணைப் பிரதமர் முகைதின் யாசினைப் பதவியிலிருந்து வெளியேற்றியதை அடுத்து அவரது முகநூல் பக்கத்தில் நேற்று தொடங்கி “#najibletakjawatan” செய்திகள் நிறைந்து வருகின்றன.
இன்று காலைவரை 34,952 கருத்துகள் அப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை நஜிப்பைப் பதவி விலகச் சொல்லியிருந்தன.
அதை எதிர்க்கும் வகையில் நஜிப் ஆதரவாளர்கள் “#WeSupportYouNajibRazak” என நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனாலும், அவர்களால் எதிர்ப்பாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
இதனிடையே, முகநூலில் முகைதினின் பிரியாவிடை செய்தி 183,197 விருப்ப இசைவுகளை(லைக்குகள்)ப் பெற்றுள்ளது. 12,655 கருத்துகளும் பதியப்பட்டிருந்தன. பெரும்பாலோர் முகைதினுக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்தனர்.
“#WeSupportYouNajibRazak” என ஆதரவு தெரிவிப்பவர்கள் கூடவே தங்களுடைய வங்கி கணக்கின் எண்ணையும் பதிவு செய்பவர்களுக்கு RM 1,000/= அவர்களுடைய வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படும் என UMNO தலைவர் ஒருவர், குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
தனேந்திரன் மட்ட்ரவர்களை minjuviduvar
அமாம் சாரே நிறைய பேரு அவர வேலை விட்டு போக சொல்லி போட்டு இருகாங்க அட கடவுளே இப்டி குட போடலாமா சார் . அவர் என்ன பாவம் செய்தார் , ஒரே ஒரு பொண்ண போம் வச்சாரு அது தப்ப என்ன கொஞ்சம் காசு சுரிட்டிடாறு அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா ? என்ன உலகம் டா சாமி .