டாக்டர் மகாதிரின் புதல்வர் முக்ரிஸுடன் சேர்ந்து சதி செய்வதாகக் கூறப்படுவதை முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்தார். முக்ரிஸ் நேற்று முகைதினைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றதை வைத்து அவ்வாறு கூறப்படுகிறது.
புக்கிட் டமன்சாராவில் உள்ள தம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முகைதின் அது வழக்கமான ஒரு வருகைதான் என்றார்.
“சதித் திட்டமெல்லாம் கிடையாது, அது ஒரு சாதாரண வருகைதான். என் நண்பருக்கு அப்படி நேர்ந்திருந்தால் நானும் அதைத்தான் செய்திருப்பேன்”, என்றார்.
முக்கி முக்கிகும் கூடிய விரைவில் ஆ,,,,ஆ ,,,ஆப்பு,,,,கிழட்டு காக்க கரைவதை கானும்மே ….காக்காவின் .குரல் வளையில் வாழப்பழம் வைத்து விட்டானோ அஜிப்…