நேற்றிரவு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது இல்லத்தில் பலரைச் சந்தித்து அவர்களுடன் நடத்திய உரையாடல் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு கசிய விடப்பட்டுள்ளது. தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்கிற்கு பல மில்லியன்கள் மாற்றப்பட்டது பற்றி முகைதின் யாசின் பேசுவது தெரிகிறது.
அப்போது அவருடன் இருந்தவர்களில் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் மற்றும் அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காடிர் ஸெய்க் ஃபாட்ஸீர் ஆகியோரும் அடங்குவர்.
53 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவின் சில பகுதிகள் தெளிவாக கேட்க முடியவில்லை என்றாலும், முகைதின் இக்குற்றச்சாட்டுகள் பற்றி நஜிப்பை எதிர்கொண்டது தெரிய வருகிறது.
இப்பணம் எங்கிருந்து வந்தது என்று நஜிப்பை கேட்டதாகவும் அதற்கு அவர் மத்திய கிழக்கிலுள்ள ஒருவரிடமிருந்து வந்தது என்று பதில் கூறியதாக முகைதின் தம்முடைய வீட்டில் இருந்தவர்களிடம் கூறுகிறார்.
அதை ஏன் உங்களுடைய தனிப்பட்ட கணக்கில் வைத்தீர்? (தெளிவாக கேட்க முடியவில்லை).
“அவர் ஒப்புக்கொண்டார். நான் கேட்டேன்: (அதை) ஏன் உங்களுடைய தனிப்பட்ட கணக்கில் வைத்தீர்?”
பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகைதின் யாசின் நேற்றிரவு பலரை அவரது சந்தித்தார். 1எம்டிபி விவகாரம் குறித்து தாம் அளித்த ஆலோசனைகளை நஜிப் புறக்கணித்து விட்டதாக அவர் புலம்பினார்.
கசிய விடப்பட்டுள்ள அந்த வீடியோ பற்றி கருத்துரைத்த அப்துல் காடிர் இந்த உடையாடல் நடந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கு மேல் எதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.
அது ஒரு தனிப்பட்ட உரையாடல். அதை பதிவு செய்திருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய வேண்டாம் என்று அங்கிருந்தவர்களை முக்ரீஸ் கேட்டுக் கொண்டார் என்று காடிர் மலேசியாகினியிடம் கூறினார்.
பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் முகைதினின் உதவியாளர்களிடமிருந்து கருத்து எதுவும் பெற முடியவில்லை. பிரதமர் அலுவலகத்திடமும் தொடர்பு கொள்ளப்பட்டது.
Below is the full transcript from the video:
Muhyiddin: I asked him (Najib) from whom? He did not mention siapa nama dia, from somewhere in the Middle East.
Berapa banyak? Lepas tu dia ..(inaudible)… susah nak kiralah. Dia kata ‘a lot’, ‘a lot’.
Then saya kata kenapa masuk account you? …(inaudible)… kenapa masuk account Najib Razak? Duit berapa? 700 million US dollar. Kalau kali tiga point something… 2.6 billion that goes into his personal account.
Ini dia sebut. He admitted. So I said why did you put into your personal account?
வரவுக்கு மீறிய பணம் வங்கிக் கணக்கில் இருந்தது என்று ஒப்புக் கொண்டதற்கு மேலிடத்து ஆதாரமே போதும். இதை வைத்து ம.இ.க. மட்டிகள் போலிஸ் புகார் செய்ய மாட்டார்களோ? எது எதுக்கோ போலிஸ் புகார் செய்யும் இந்த மட்டிகள் இதையும் போலிஸ்சில் புகார் செய்யுங்களேன். எங்கே அந்த சுப்பிரமானவரும், சரவணமானவரும். திருட்டுக்குத் துணை போவார்களா அல்லது உண்மைக்குத் துணை நிற்பார்களா இவர்கள்?.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை எப்படித்தான் இந்த அரசியல்வாதிகள் வாயைத் திறக்காமல் மௌனம் சாதித்து தங்கள் முகத்தில் கரியைப் பூசிக் கொள்கின்றார்களோ தெரியவில்லை. பாமரர் வருமானத்திற்கு ஏற்ற வரியை கட்ட உள்நாட்டு வருமானத் துறை நமது கோவணத்தையும் உருவித் தொலைகின்றார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கில் கோடானு கோடி இருந்தும் எந்த ஒரு வருமான வரித்துறை நடவடிக்கையும் காணோமே. ஆண்டானுக்கு ஒரு சட்டம் அடிமைக்கு ஒரு சட்டம் என்பது இந்நாட்டைப் பொறுத்த வரையில் உண்மைதான்.
இந்த விசாரணையை இழுக்கடித்து தாமதப்படுத்துவதுக்குத்தான் இல்லாத கூட்டு நாடகம் நடப்பதுபோல் தோன்றுகிறது!!! தேவையற்ற திடீர் அமைச்சரவை மாற்றம், அரசாங்க தலைமை வழக்குரைஞர் மற்றும் பொது கணக்குகுழுவில் மாற்றம், போலிஸ் சிறப்புப்படை தலைவர் மாற்றம், இதுமாற்றுமின்றி, போலிஸ் பழைய தலைமையகத்தில் திடீர் தீச் சம்பவம். எல்லாமே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது!!! கேள்வியே, குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் $US 700மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே!! அதற்கான பதிலை மக்களிடம் சொல்லிவிட்டு, உண்மை என்றால், விசாரணையத் தொடரலாம். விசாரணையை மேற்கொள்ளும் அனைத்து குழுவினரும் வாயடைத்து நிற்கும் வேளையில், மக்களுக்கு சந்தேகமும் அவநம்பிக்கையுடன் சேர்ந்த வெறுப்புமே அதிகரிக்கும்!!! சந்தேகப் பேர்வழி ஒரு பாமர மக்களாயின் இந்நேரம் அவன் (பெண்டு கழன்று) சிறு குழந்தையில் குடித்த தாய்ப் பாலைக்கூடக் கக்கி இருப்பான்!! விலைவாசி உயர்ந்து ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கும் இந்நாட்டில், வரிப்பணம் கட்டும் ஒவ்வொரு குடிமகனும் இம்மாதிரியான கேள்வி எழுப்புவது நியாயம்தானே???
நஜிப்பின் வங்கிக் கணக்கில் போன 1MDB பணம் மக்களுடையது. இதற்கு முன் செய்யப்பட்ட 1MDB சம்பந்தப்பட்ட போலீஸ் புகார்களும், அதன் சம்பந்தப்பட்ட போலீஸ் தஸ்தாவேஜுகளும் நேற்றைய முன்தினம் புக்கிட் அமானில் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, புதிய புகார்களை செய்து இந்த பகல் கொள்ளையை விடாமல் துரத்த வேண்டும்.
எல்லாம் ஒரு குட்டையில் வாழும் முதலைகள்தான்,பெரிய முதலை பெரியதாக தின்னும்,சிறிய முதலை சிறியதாக தின்னும்,இரண்டாவது பெரிய முதலைக்கேற்றவாறு கொஞ்சம் கிடைத்திருந்தால், இதுவும் தின்னுப்புட்டு ஒரு ஓரமாக தூங்கியிருக்கும்.
முகைதீன் மற்றவர்களைப் போல் அல்ல. அவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட போவதில்லை! வேறு ஏதாவது பதவி கிடைக்குமா அங்கு ஏதாவது திருட முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்!