அமெரிக்கா வெளியிட்டுள்ள அகதிகளை கையாளும் நாடுகள் குறித்த பட்டியல் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் மனித உரிமைத் துறை அமைச்சகம் சமீபத்தில் நவீன அடிமைத்தனம் என்ற வருணனையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் அகதிகள் விவகாரத்தை மிகவும் மோசமாகக் கையாளும் நாடுகளின் 3-ஆம் பிரிவில் தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது.
ஆனால், அமெரிக்காவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தி வரும் மலேசியா, மற்றும் பரம வைரியாக இருந்து தற்போது அமெரிக்காவுடனான உறவைப் புதுப்பித்து வரும் கியூபா ஆகிய நாடுகள் 3-ஆம் பிரிவிலிருந்து, அகதிகள் விவகாரத்தை ஓரளவு சரிவரக் கையாளும் நாடுகளின் 2-ஆம் பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. மேலும், அகதிகள் விவகாரம் குறித்த அறிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இது குறித்து குடியரசுக் கட்சி எம்.பி.யான ராபர்ட் மெனெண்டஸ் கூறியதாவது, அகதிகள் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தேவையான எந்த அடிப்படை நடவடிக்கையும் மேற்கொள்ளாத மலேசியாவுக்கும், கியூபாவுக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருப்பது, ஒபாமா அரசு மனித உரிமைகளைவிட அரசில் ஆதாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
-http://world.lankasri.com