மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370 காணாமல்போய் 16 மாதங்கள் ஆகும் வேளையில் புதிதாகக் கிடைத்துள்ள ஒரு தடயம் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது.
மடகாஸ்கார் கரைக்கு அப்பால் மாரிசியஸ் தீவிலிருந்து 175 கிமீ தொலைவில், ரியூனியன் தீவில் விமானத்தின் உடைந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இந்த நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், அது 239 பேருடன் காணாமல்போன அந்த விமானத்தினுடையதுதானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஒரு விமானத்தின் சிறகுப் பகுதி எனக் கருதப்படுகிறது. ஆனால், அது போயிங் 777 விமானத்தினுடையதுதானா என்பதில் வல்லுனர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
அது போயிங் 777 விமானத்துடையதுதான் என்று அமெரிக்க வல்லுனர்கள் கூறியதாக கேன்பெரா டைம்ஸ் அறிவித்துள்ளது.
“வேறு போயிங் விமானம் எதுவும் காணாமல்போனதாக அறிவிக்கப்படவில்லை என்பதால் அது காணாமல்போன விமானத்தின் பகுதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்”, என்று அது கூறிற்று.
பிரெஞ்ச் வான் போக்குவரத்து பாதுகாப்பு வல்லுனரும் குற்றவியல் ஆய்வாளருமான கிறிஸ்டோபர் நவ்டின், கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உருவில் சிறியதாக இருப்பதால் எம்எச் 370 விமானத்தினுடையதல்ல என்றார்.
“அது எந்த விமானத்தினுடையது என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. அது இரட்டை இயந்திரங்களைக் கொண்ட இலகுரக விமானத்தினுடையதாக இருக்கலாம்”, என நவ்டின் ரியூனியன் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதனிடையே, அப்பகுதி காணாமல் போன MH370 விமானத்துடையதுதானா என்பதை உறுதி செய்ய, மலேசியக் குழு ஒன்று ரியூனியனுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.
மலேசிய குழு ஒன்றை ரியூனியனுக்கு GST-க்காக, அதாங்க சமீபத்தில் நமது IGP தாய்லாந்திற்கு “GOOD SEXUAL TRAINING” சென்று வந்தாரே அது மாதிரி. இது மாதிரியான பயிற்சிக்கு உள்துறை அமைச்சின்கீழ் பணியாற்றுபவர்கள் மட்டும்தான போகலாம் என்றால் நாங்கள் என்ன இளிச்ச வாயன்களா பார்த்து கொண்டிருக்க, இதோ என் போக்குவரத்து அமைச்சின்கீழ் பணியாற்றுபவர்களை அனுப்புகிறேன் என்று போட்டி போட்டு கொண்டு அனுப்பி வைக்கிறார் போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியோங் லாய்.
நம்ப முடியவில்லை.விமானங்களின் கழிவுப் பாகங்களை [குப்பைகள்] கொண்டு போய் கொட்டும் இடம்தான் இந்த ரி யூனியன் தீவு. மேலும் மொரிஷியசை தாண்டித்தான் இந்த ரி யூனியன். மோரிஷியசுக்கு இவ்விமானம் பற்றி தெரியாமல் போனதின் மர்மமென்ன? அந்நாட்டில் ராடார் கிடையாதா? அதுமட்டுமல்ல, கோலாலம்பூரிலிருந்து வியட்நாம்வரை விமானம் [MH370]பறந்துவிட்டது. அதன்பின், அங்கிருந்து ரி யுநியன்வரை செல்ல விமானத்தில் பெட்ரோல் போதாது. இன்னும் என்னென்ன ‘சேதிகள்’ வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
singam அவர்களே அந்த விமானம் reunion தீவு வரை சென்றிக்க முடியாது– ஆனால் உடைந்த பாகங்கள் எத்தனை ஆயிரம் கல் தொலைவுக்கு கடல் வழி அடித்து செல்ல முடியும்– ஜப்பான் ஆழிப்பேரலை ஜப்பானிலிருந்து எவ்வளவோ பொருட்களை அமெரிக்க வரையில் அடித்து சென்றுள்ளது.
உலகளவில் அங்கிகரிக்கப்பட்ட நமது ஆய்வாளர்கள் போனால் அனைத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள்! கவலையை விடுங்கள்!