தற்கொலைத் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் சாவு

Kurdistan-Flag-and-Mapதுருக்கி ராணுவ முகாமில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.

அந்த நாட்டின் அக்ரி மாகாணம், தொகுபயாசித் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்த்தப்பட்டது. ஏராளமான வெடிபொருள்கள் நிரப்பிய டிராக்டரை வேகமாக ஓட்டி வந்த நபர், ராணுவ முகாமுக்குள் நுழைந்து மோதச் செய்தார்.

இத்தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 25 வீரர்கள் காயமடைந்தனர். தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினருக்கு (பி.கே.கே.) எதிராக துருக்கி கடந்த வாரம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இதில் சுமார் 260 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு கூறி வருகிறது. ஆனால் விமானப் படை குண்டு வீச்சில் குர்து பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்தனர் என பி.கே.கே. குற்றம் சாட்டியது.

இதற்குப் பழிவாங்கும் நோக்குடன் தற்கொலைத் தாக்குதலை பி.கே.கே. நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
துருக்கியில் பி.கே.கே. அமைப்பு நடத்தும் முதல் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத் தக்கது.

-http://www.dinamani.com