பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கு பற்றி எம்ஏசிசி விடுத்த அறிக்கை 1எம்டிபி விவகாரம் பற்றிய எந்த முக்கியமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
மாறாக, புதிய கேள்விகள்தான் எழுகின்றன என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கூறினார்.
“எந்த எதிர்பார்ப்புமின்றி நன்கொடையாளர் ஒருவர் ரிம2.6பில்லியனை பிஎன்னின் 13வது பொதுத் தேர்தல் செலவுக்காக நஜிப்பிடம் கொடுத்தார் என்ற விளக்கத்தைத் தெளிந்த புத்தியுள்ள எந்த மலேசியனும் ஏற்க மாட்டான்.
“எனவே, அம்னோ தலைமைத்துவம் பேசும் நன்கொடைகளை எம்ஏசிசி சட்டத்தின் பகுதி 3-இன்படி கைக்கூலியாக வரையறுக்க முடியும்”, என்றவர் கூறினார்.
இந்த அரசியல் நிதியளிப்பு பற்றி எம்ஏசிசி-இல் புகார் செய்து அதன்மீது விசாரணை நடத்த அந்த ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாடு முழுக்க உள்ள அடிநிலை தலைவர்களுக்கு பிகேஆர் தலைமை உத்தரவிட்டிருப்பதாக ரபிஸி கூறினார்.
அம்மாடியோ இந்நேரம் சாதாரண மக்கள் வங்கி கனக்கில்இவளவு பணம் நன்கொடை நுழைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ????????????
சும்மாவே 10 வெள்ளி கேட்டால் செருப்பால அடிக்கிற உலகம் இது ,வேலேக்கென்ன பேசுது பாரு ,நன்கொடையாக கொடுதானுங்கலாம் ,கேக்கறவன் கேனையனாக இருந்தா எதுவேண்டுமானாலும் கேப்பெங்கலாட
இவன்கள் எமனுக்கு கணக்கு கட்டுவணுக.
நஜீப்பும் BN.உம் மலாய்காரர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டன . இவர்கள் இந்திய அரசியல்வாதிகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டனர் . மலேசியர்களே இந்த தரம் குறைந்த BN.யை வரும் தேர்தலில் துக்கி எறியுங்கள் .
“புத்தி” – உள்ள பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அப்பணத்தை “நன்கொடை” என்று ஏற்றுக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்களே? அப்ப, நீங்கள் அவர்களை புத்தி இல்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா? புதிதாக வந்த ஞானோதயத்தை வைத்துக் கொண்டு அல்லது சொல்லிக் கொடுத்த மொழியை கிளிப் பிள்ளையைப் போன்று இவர்களும் சொல்லிக் கொண்டு இருகின்றார்கள். இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களா இவர்கள் என்ற டவுட் வருது.
தேசிய முன்னணியை தூக்கி எறிவது அவ்வளவு சுலபமல்ல. அன்வர் வீணான பேச்சினால் கடந்த தேர்தலில் சாதிக்க முடிந்ததை முடியாமல் போனது. அம்னோ எல்லா தில்லு முள்ளும் திகுடு தாளம் பண்ணி ஆட்சியில் இருக்க செய்யும் — நான் சொன்னால் எடுபடாது– அம்னோவுக்கு பணபலம் ராணுவ காவல் மற்ற 5ம் படைகள் இருக்கின்றன. ஜாக்கிரதை மிகவும் தேவை.
”கூடயிருக்கிறவனுங்க எல்லாம் பிரதமர் சொல்லுரதுக் ஆமாம்சாமி போடலே ஆப்புதான்.
இந்த லொள்ளு நக்கல்தானே வேணாம்கிறது !
அதென்ன நன்கொடை என்பதை “திட புத்தியுள்ள மலேசியர்கள்” ஏற்க மாட்டார்கள் என்றால் நன்கொடைகளை ஏற்று கொண்ட BN அரசு மற்றும் BN ஆதரவாளர்கள் “வடி கட்டின முட்டாள்களா” ?
ஏற்றுக் கொண்டவர்கள் மடப் புத்தி உள்ளவர்கள் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்! தெளிந்த புத்தி உள்ளவனைத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டார்களே!