பிரான்ஸ் கலைஸ் பகுதியில் 5,000 பேர்: லண்டனுக்குள் வர உயிரைப் பணயம் வைக்கிறார்கள் !

லிபியாவில் இருந்தும் வேற்று நாடுகளில் இருந்தும் , கடல் வழியாக பிரான்ஸ் வந்து கலைஸ் என்னும் துறை முகத்தில் உள்ள காடுகளில் சுமார் 5,000 பேர் தங்கியுள்ளார்கள். இவர்களின் ஒரே நோக்கம் , லண்டனுக்குள் எப்படி என்றாலும் வந்து விடுவது தான். இவர்களுக்கு என்று ஒரு வீடு கிடையாது. ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை தாங்கவும் முடியாது. சிறிய கூடாரங்களை அமைத்து. கள்ள மின்சாரத்தை எடுத்து தமது , மோபைல் போன்களை சார்ஜ் செய்கிறார்கள். அது போக அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்பதனால் , அவர்கள் அங்கே தமக்கு என்று ஒரு பள்ளிவாசலையும் அமைத்து விட்டார்கள்.

அது மட்டுமா , கொஞ்சக் காசை வைத்திருக்கும் நபர் ஒருவர் அங்கே சிறிய பெட்டிக் கடை ஒன்றைக் கூட திறந்து விட்டார். அங்கே வியாபாரமும் ஓகோ ஆஹா என்று நடக்கிறது. இவர்கள் வேலை என்ன தெரியுமா ? சதா 24 மணி நேரமும் லண்டனுக்குள் நுளைய முயற்ச்சிப்பது தான். லண்டனை நோக்கி வரும் பார ஊர்தி , லாரிகள் , வேன்கள் எது என்று இவர்கள் பார்பதே இல்லை. அங்கே சிறிது நேரம் குறித்த வாகனம் தங்கினால் போதும். யாருக்கும் தெரியாமல் அதில் ஏறி ஒளிந்து கொள்கிறார்கள். அதனூடாக லண்டன் வந்துவிடலாம என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களின் முயற்ச்சி இதுவரை பலனளிக்கவே இல்லை.

-http://www.athirvu.com