பாஸ்: நஜிப் ரிம2.6பில்லியன் நன்கொடையாளருக்கு வேலை செய்கிறாரா?

working for donorமக்கள்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் எஜமானர்கள். அவர் அவர்களுக்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் பிரதமருக்கு நினைவுறுத்தினார்.

ஆகவே, ரிம2.6பில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதை நஜிப் வெளிப்படுத்த வேண்டும் என்று துவான் இப்ராகிம் கூறினார்.

மக்களிடமிருந்து அவருடைய ஊதியத்தைப் பெறுகிறவர் என்ற முறையில் பிரதமர் அவருடைய எஜமானர்களுக்கு அவருடைய வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ள அந்த ரிம2.6பில்லியன் working for donor1நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதைக் கூற வேண்டும் என்றாரவர்.

அந்த நன்கொடையாளர் யார் என்று மக்கள் தெரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் பிரதமர் யாருக்கு வேலை செய்கிறார் – மக்களுக்கா அல்லது நன்கொடையாளருக்கா – என்ற சந்தேகத்தையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க முடியூம் என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

1எம்டிபி நிதியிலிருந்து ரிம2.6 பில்லியன் அவரது சொந்த வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டது என்று வால்ஸ்திரீட் ஜர்னல் அவர் மீது குற்றம் சாட்டியதற்கு விளக்கம் அளிப்பதற்கு மாறாக தாம் அப்பணத்தை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தவில்லை என்று நஜிப் வலியுறுத்தியிருப்பது விசித்திரமாக இருப்பதாகவும் துவான் இப்ராகிம் கூறினார்.

எம்எசிசி (மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) அப்பணம் நன்கொடையாளர்களிடமிருந்து வந்தது என்று அறிவித்து இருப்பதால் மக்கள் அதனை நம்புவார்கள் என்று பிரதமர் நஜிப் இப்போது நம்பிக்கை கொண்டுள்ளாரா என்று இப்ராகிம் வினவினார்.