பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்கானதாகும் என்றால், அது எப்படி அம்னோவின் துணைத் தலைவரான முகைதின் யாசினுக்கு தெரியாமல் போனது?
பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் அந்தத் தொகை ஓர் அரசியல் நன்கொடை என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி இக்கேள்வியைக் கேட்டார்.
கடந்த திங்கள்கிழமை எம்எசிசி ரிம2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்டது என்றும் அது அரசுக்குச் சொந்தமான 1எம்டிபியிபிருந்து அல்ல என்று அறிவித்திருந்தது. ஆனால், விபரம் ஏதும் அளிக்கவில்லை.
கசியவிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில் அது குறித்து நஜிப்பிடம் வினவியதாகவும் அது மத்தியக்கிழக்கிலிருந்து பெறப்பட்டது என்று நஜிப் கூறியதாகவும் முகைதின் கூறுகிறார்.
இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை. ஆளும் பாரிசான் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரபிஸி வலியுறுத்தினார்.
இது தனக்கான நன்கொடை. அதனால துணைத் தலைவருக்கெல்லாம் தெரியக் கூடாது!. இவ்வளவு நடந்தும் அந்த கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் வாயை மூடிக் கொண்டிருகின்றார்கள் என்றால் எல்லோரும் நன்கொடையை பங்கிட்டுக் கொண்டவர்களோ?
முதற்கண், இந்த பெருந்தொகை நன்கொடை பணம் என்று ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே?? ஏன் இத்தனை ஒளிவு மறைவு, தேவையற்ற விசாரணைகள், மாற்றங்கள், மிரட்டல்கள்??? நன்கொடை பணம் என்று சொல்லப்படும் இந்த பெருந்தொகை தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது மத்திய வங்கிக்கு தெரியப்படுத்தப்பட்டதா?? இந்த பெருந்தொகை 2013 பொது தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால், தேர்தல் முடிந்ததும், அதன் கணக்கறிக்கை தேர்தல் ஆணையத்திடம் தெளிவாக கொடுக்கப் பட்டதா?? தேர்தல் முடிந்த உடனே வங்கிக் கணக்கை மூடியதன் நோக்கம்??? வங்கிக் கணக்கு மூடும் தருணத்தில் மீதப் பணம் ஏதும்??? மீதப் பணம் இருந்திருப்பின் அப்பணம் என்ன ஆனது??? இந்த கேள்விகளுக்கே இன்னும் தெளிவு கிடைக்கவில்லையே!!! இன்னும் எத்தனையோ சந்தேகக் கேள்விகள் மக்கள் மனதினில் இன்னும் அலைபோல் பொங்கிக்கொண்டிருக்கிறது!!!! இதற்கெல்லாம் தெளிவான விளக்கம் கொடுப்பது ஆளும் அரசாங்கத்தின் கடமை!!!
இந்த ரபிஸி ரம்லியுடைய லொள்ளு தாங்க முடியலை !
நன்கொடை என்பதை “திட புத்தியுள்ள மலேசியர்கள்” ஏற்க மாட்டார்கள் என கூறிவிட்டு அம்னோவின் துணை தலைவரான முகைதின் யாசினுக்கு எப்படி தெரியாமல் போனது என்று கேட்டால் எப்படிங்க ?
அவன் காதிலே போட்ட வச்சிருக்க மாட்டானுங்க ,,போடாதானே தெரியும் ,,
அட போங்கப்பா!!! பிரதமருக்கே அந்த பெரிய தொகை நன்கொடையாகத்தான் நுழைந்தது என்று இப்பத்தான் தெரியும்!! பிறகு எப்படி முன்னாள் துணைப் பிரதமருக்கு தெரிய வாய்ப்பு???
ஏன்அவன் பிலாச்சான்சாப்பிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தானா ?????
2.6பில்லியன் அம்னோ உறுப்பினர்கள் நன்கொடையாக அளித்தது என்றால் தொகுதி தலைவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்
பல தொகுதி தலைவர்களே 1 MDBமுறைகேடுகளை கண்டிக்கிறார்களே
மத்தியகிழக்கிலிருந்து 2.6 பில்லியன் நன்கொடை பெறப்பட்டது என்றால் ஒருகால் நம் நாட்டை அடமானம்.(வட்டிக்கு)குடுத்திருப்பாரோ?
GST வரிக்கும்.நன்கொடைக்கும் தொடர்பு இருக்குமோ?போயி சொன்னாலும் நம்பும்படி சொல்ல நம்பிக்கை நாயகனுக்கு தெரியலையே!எது எப்படியோ 2020ல் நாடு முன் (நாரி)நேரிவிடுமாம்
அன்று அவர் விடுமுறையில் இருந்தார் அதுதான் அவருக்கு தெரிய வில்லை.தெரிந்துருந்தால் அன்றே சொல்லிருப்பார்.
தெரிந்து இருக்கும் ,,, அவருக்கும் இது போன்ற நன்கொடை வரவேண்டும் என்ற முயற்சியில் ,, ஆட்சியாளர்களை அணுகி அடுத்த என்னை பிரதமர் ஆக்குங்கள் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் மறந்து விட்டார் ,,,, இப்பொழுது மண்ணை கவ்வி விட்டார் ,,,