வடமராட்சி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் இதனால், தமது மீனவர்கள்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் இ.அருள்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக அத்துமீறாத மீனவர்கள், கடந்த 3 தினங்களாக வடமராட்சி கடற்பரப்புக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்;து வருகின்றனர். கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்துக்கும் குறைந்தளவு தூரத்துக்கு வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றதெனவும் அருள்தாஸ் தெரிவித்தார்.
பகல் வேளைகளில் அதிகளவான தூரத்தில் நின்று மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இரவானதும், அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் நுழைகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இலங்கை கடற்படைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் எனினும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லையெனவும் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
-http://www.pathivu.com