வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் பெருமளவான ஆசனங்களை கைப்பற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை கடும் சவாலை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
அதிகபடியான சிறுகட்சிகள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நெருக்கடியான சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமே போட்டியாக இருந்தது.
ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புட் போட்டியிட்டிருந்தார்.
இந்த முறை ஈ.பி.டி.பி. தனியாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனியாகவும் போட்டியிடுகின்றன.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ்; காங்கிரஸ், போராளிகள் கட்சி என தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் குறைவடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.pathivu.com