இலங்கையில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி மக்களிடம் கை தட்டலை வாங்கி வாக்குகளைப் பெற்று MP ஆகிவிடுவது வழக்கம். ஆனால் புலிகள் ஆதரவாளர்களை புற முதுகில் குத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இன் நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்களை ,கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்த வேளை, புலிகளின் தலைமை மற்றும் தளபதிகள் ராணுவ முற்றுகையை ஊடறுக்க முன்றார்கள். இதேவேளை அரசியல் போராளிகள் மற்றும் காயப்பட்ட போராளிகள் சரணடைய எத்தணித்தார்கள்.
இன் நிலையில் பல காயப்பட்ட ,பெண்கள் சிறார்களை மற்றும் முதியவர்களை அழைத்துக்கொண்டு தான் அரசியல் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் ராணுவத்திடம் சரணடைய முயன்றார். அவர் பலரோடு தொடர்பு கொண்டு தனது சரணடைவைப் பற்றி பேசியுள்ளார். உலக அரங்கில் உள்ள பல முக்கியமானவர்கள் இது தொடர்பாக பேசியிருந்த போதும் தமிழ் தலைவர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் சம்பந்தர் ஒரு திருட்டு வேலையில் ஈடுபட்டு இருந்தார். அதாவது தனது மோபைல் போனை ஆப் செய்துவிட்டு, அலுவலக போனை தூக்கி வைத்து விட்டு இருந்துள்ளார். அப்படி என்றால் யாராவது போன் செய்தால் , அது என் -கேஜ் சவுண்டு வரும். எனவே இவர் வேறு யாரோடோ பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அழைப்பவர்கள்(புலிகள்) நினைப்பார்கள் அல்லாவா.
இது போன்ற அருவருக்கதக்க காரியங்களை செதுள்ளார் சம்பந்தர் என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள். தன்னோடு தொடர்பு கொண்ட அரசியல் போராளிகள் சம்பந்தர் தொலைபேசி தொடர்ந்து என் கேஜாக இருக்கிறது என்று கூறினார்கள் என்பதனையும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். இது போன்ற வரலாற்று துரோகங்களை செய்த மனிதர்களுக்கு தான் நாம் வாக்குகளை அள்ளி வீச இருக்கிறோமா என்று வட கிழக்கு மக்கள் சற்று சிந்திப்பது நல்லது. இதனை நாம் எழுதுவதால் , நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிராளிகள் அல்ல. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் மாறவேண்டும். இளையவர்களுக்கு அதில் உள்ள மூத்த அரசியல் வாதிகள் வழிவிட்டு ஒதுங்குவது நல்லது. மேலும் மாற்று அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்தாது நாகரீகத்தோடு நடந்துகொள்வது நல்லது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள , சம்பந்தர், சுமந்திரன் மாவை , ஸ்ரீதரன் போன்ற நபர்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். இதனூடாகவே மக்கள் நம்பிக்கையை கட்டி எழுப்ப முடியும்.
-http://www.athirvu.com
எட்டப்பன்கள் நம் இனத்தின் சாபக்கேடு.
வரி வட்டி கிஸ்தி என்று வசூலித்துக் கொண்டு கொடுமைபடுத்தியதில் இருந்து பாஞ்சாலங் குறிச்சி தமிழர்களை எட்டப்பன் ஆங்கிலேயரின் உதவியைக் கொண்டு காப்பாற்றினார். அதனால் எட்டப்பனைப் பற்றிய கருத்தை இனி மாற்றிக் கொள்ளுங்கள். தமிழர்களை காப்பாற்றியவர் எட்டப்பன் என்று அவரைப் புகழுங்கள். அதே அர்த்தத்தில் அவரை வாழ்த்துங்கள். தமிழர் எட்டப்பன் பரம்பரை என்பதில் பெருமிதம் கொள்வோம். இகழ்ச்சி அடைய வேண்டாம்.