கனவில் வந்த சாமியார்: 1300 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதை வென்ற ஜப்பான் ஹொட்டல்

japanes_hotel_001ஜப்பானில் ஹோஸி ரியோகு என்ற ஹொட்டல் 1300 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

ஜப்பானில் கோமட்சு என்ற நகரில் இயங்கிவரும் தங்கும் விடுதியும் ஹாட் ஸ்பா வசதியும் கொண்ட இந்த ஹொட்டல்தான் உலகிலேயே பழமையானதும் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கிவரும் வணிக ஸ்தாபனமும் ஆகும்.

இதில் இன்னும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் 46 தலைமுறைகளாக இதை நடத்தி வருகின்றனர்.

இந்த ஹொட்டல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுற்கு நிரந்தரமாகவும் வாடிக்கையாளர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் இந்த ஹொட்டலில் தங்கி தங்களை புத்துணர்ச்சி செய்துகொள்வதை மகிழ்ச்சியாக கருதினர்.

இந்த ஹொட்டலின் இன்னொரு சிறப்பு அம்சம் இங்கு உள்ள நீர். இது வெதுவெதுப்பான நீரூற்றிலிருந்து பெறப்படுகிறது.

ஹோஸி ரியோகு தொடங்கப்பட்டதிலும் ஒரு புனித கதை உள்ளது. இந்த ஹொட்டலை கட்டியவர் டைகொ டைஸி என்ற ஒரு புத்த சாமியார். இவருக்கு அவருடைய குரு கனவில் தோன்றிதான், இந்த இடத்தை தெர்ந்தெடுக்க சொன்னார்.

ஹோஸி ரியோகு ஹொட்டல் உதயமான கதை

டைகோ டைஸி ஒரு தற்காப்பு கலை ஆசிரியரும் ஆவார். ஒருநாள் அவர் மலைமீது உள்ள வீட்டில் கடுமையான பயிற்சிகள் செய்துவிட்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவருடைய குரு புத்த சாமியாரான ஹாக்கிசன் கனவில் தோன்றி இங்கிருந்து 20 – 24 கி.மீ. தூரத்தில் அவசு என்ற கிராமம் உள்ளது, அந்த கிராமத்தில் பூமிக்கடியில் சூடான நீரூற்றும் உள்ளது. அந்த நீரூற்று இருப்பது அந்த கிராமத்து மக்களுக்கு தெரியாது. அது சாதாரணமானது அல்ல.

உயிர்களை புத்துணர்வாக்கும் அதிசய மருத்துவ குணம் கொண்டது.. அதனால், நீ உடனே போய் அந்த ஊற்றை கண்டுபிடித்து மக்களுக்கு பயனடைய வழிசெய் என்று கூறியுள்ளார்.

விழித்து எழுந்த டைகோ டைஸி, உடனே மலையிலிருந்து கீழே இறங்கி அந்த கிராமத்து மக்களை அழைத்துக்கொண்டு போய் தோண்டி கண்டுபிடித்துள்ளார்.

நோயுற்ற சிலரை அந்த நீரில் முக்கி எடுத்தார். கனவில் சொன்னது போலவே குணமடைந்தனர். அப்புறம் என்ன கேட்க வேண்டுமா டைகோ டைஸிக்கு நல்ல தொழில் கிடத்ததாக ஹொட்டலை கட்டிக்கொண்டு நல்ல பணம்பார்க்க ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து அது அவர்களின் குடும்ப பாரம்பரிய தொழிலாக மாறியது அதுவே இத்தனை காலம் ஒரே இடத்தில் கின்னஸிலும் இடம்பெற்று, வெற்றிகரமாக விடுதி நடைபெற்று வருவதன் ரகசியம் ஆகும்.

ஹோஸி ஹொட்டல் தொடங்கிய காலம்

ஹோஸி ஹொட்டலின் கதவு முதன்முதலாக கிபி.718ல் தான் திறக்கப்பட்டது, அந்த காலகட்டத்தில் ரோம் நகரம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் அதன் கலாச்சாரம் உலகில் பிரதானமாக விளங்கிக்கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் ஐரோப்பாவின் மீதும் இந்தியா மீதும் படையெடுப்புகள் நடத்துவது, உச்சகட்டத்தில் இருந்தது.. தீர்க்கதரிசி முகமதுவை சந்தித்தவர்கள் உயிரோடு வழ்ந்த காலம்.

மாயா மக்கள் தென் அமெரிக்காவில் நசுக்கப்பட்டனர். ரோமின் கிழக்கு பிராந்தியங்களில் பைஸண்டைன் மற்றும் பல்கர் மக்கள் போராடிக்கொண்டிருந்தனர்.

சீனர்கள் அப்போதுதான் புதிதாக, துப்பாக்கி வெடிமருந்துகளை கண்டுபிடித்திருந்தனர்.

கிரேட் பிரிட்டன், பிராங்கின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஐரோப்பியர்களுக்கு அது இருண்ட காலம், அதன் பிறகும், அது தலைநிமிர பல நூறு ஆண்டுகள் ஆனது.

ஹோஸியின் சிறப்பு

ஜப்பானில் இத்தனை அரசர்களின் ஆட்சிகளை கடந்தும். சாமுராய், நிஞ்சா சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியை கடந்தும், இரண்டு உலகப்போர், அணுகுண்டு வெடிப்பு என எல்லாவற்றையும் கடந்து தொடர்வது பூமிக்கே ஒரு அருமைதான்.

ஆனால், ஒரு டபுள் பெட் ரூமுக்கு ஒரு இரவுக்கு வாடகை 580 அமெரிக்க டொலர் மட்டுமே. இங்கு 100 அறைகள் உள்ளன. ஜோடியாக தங்க தனி அறைகளும் உண்டு.

நீருற்றையும் தாண்டி அழகான தோட்டம், கலாச்சார அழகு, இயற்கை அழகு, மிளிரும்படியான அம்சங்களும் இங்கு உள்ளன.

-http://world.lankasri.com