இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாம் இணைப்பு:
விபத்திற்குள்ளான 54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பப்புவாவின் ஒக்கேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளான இந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதில் பயணம் செய்தவர்கள் உயிர்பிழைத்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இரண்டாம் இணைப்பு:
இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர் காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்டேப் என்ற மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு:
இந்தோனேசியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் சென்றது.
அதில், 49 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது, விமானத்தின் சிக்னலுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
டிரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அப்பகுதிக்கு மீட்புக்குழு விரைந்து சென்றது.
-http://world.lankasri.com